விடுதலைப் புலி இயக்கத்தில் இருந்தவருக்கு பாஸ்போர்ட், விசா பெற உதவியவர் கைது

By செய்திப்பிரிவு

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவருக்கு போலி பாஸ்போர்ட், விசா பெற உதவிய நபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இலங்கை யாழ்ப்பாணம் கொடிகாமத்தைச் சேர்ந்தவர் குமரகுரு(40). விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1992 முதல் 1997 வரை கள வீரராக பணியாற்றிய இவர், 21.1.2014ல் சுற்றுலா விசாவில் சென்னைக்கு வந்தார். காலம் முடிந்தும் அவர் இலங்கைக்கு திரும்பிச் செல்ல வில்லை.

இந்நிலையில் திருச்சியில் இருந்து மலேசியா வழியாக சுவிட்சர்லாந்து தப்பிச் செல்வ தற்காக கடந்த 25-ம் தேதி திருச்சி வந்தார். 26-ம் தேதி காலை 7 மணிக்கு மலேசியா செல்லும் தனியார் விமானத்துக்குப் பயணச் சீட்டு பெற்றிருந்த இவரை, அதற்கு முன்னதாக திருச்சி விமான நிலைய போலீஸார் கைது செய்தனர். இவர் வெளிநாடு தப்புவதற்கு உதவியதாக ராமநாத புரம் மாவட்டம் திருவாடனை அருகில் உள்ள உப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன்(37) என்பவரையும் கைது செய்தனர்.

குமரகுரு போலி பாஸ்போர்ட், விசா பெற சென்னை மயிலாப் பூரைச் சேர்ந்த டிராவல் ஏஜென்ட் முபாரக் அலி (43) ஏற்பாடு செய் தது தெரியவந்தது. தனிப் படை போலீஸார் அவரை கைது செய்து சென்னையில் உள்ள வீடு, அலுவலகங்களில் நேற்றுமுன் தினம் சோதனை நடத்தினர். இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

இதற்கிடையே, முபாராக் அலியை நேற்று திருச்சி மாவட்ட 6-வது குற்றவியல் நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். வெளிநாட்டவருக்கு போலி பாஸ் போர்ட் தயாரித்து கொடுக்கும் கும்பலின் முக்கிய பிரமுகரான சென்னையைச் சேர்ந்த அன்சாரி குறித்து மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

57 mins ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

வாழ்வியல்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்