அத்திவரதரை அனந்தசரஸ் குளத்தில் மீண்டும் வைத்தால் அதிக மழை பொழிவு இருக்கும்: பக்தர்கள், பட்டாச்சாரியார்கள் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்

அத்திவரதர் மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்ட பத்தில் வைக்கப்பட்டால், அடுத்த 15 நாட்களுக்குள் மழைபெய்து குளம் முழுமையாக நிரம்பும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அனந்தசரஸ் குளத்தில் 40 ஆண்டுகளாக வாசம் செய்து வந்த அத்திவரதர், கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதி வஸந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும், ஒரு மண்டலம் (48 நாட்கள்) பக்தர்களுக்கு அருள்பாலித்துவிட்டு மீண்டும் அனந்தசரஸ் குளத்தின் நீராழி மண் டப அறையில் வரும் 17-ம் தேதி இரவுமுதல் சயனிக்க உள்ளார்.

கடந்த 1937 மற்றும் 1979 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற அத்திவரதர் வைபவத்தில் 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள் பாலித்த அத்திவரதர் மீண்டும் நீராழி மண்டபத்தின் கீழ் வைக்கப் பட்டார்.

அப்போது நீராழி மண்டபத்தின் கீழ் உள்ள அறை தண்ணீர் ஊற்றி நிரப்பப்பட்டது. ஆனால், அடுத்த 13 நாட்கள் தொடர்ந்து மழை பெய்து அனந்தசரஸ் குளம் இயற்கையாக நிரம்பியதாக பக்தர்கள் மற்றும் உள்ளூரில் வசிக்கும் முதியோர் தெரிவிக்கின்றனர்.

அதேபோல், இம்முறையும் அத்திவரதர் நீராழி மண்டபத்தின் உள்ளே வைக்கப்பட்டதும் காஞ்சி புரத்தில் கனமழை பெய்யும் என்றும், அதன்மூலம் குளம் இயற்கையாக மீண்டும் நிரம்பும் என்றும் பக்தர்கள் மற்றும் பட்டாச் சாரியார்கள் நம்பிக்கை தெரிவி க்கின்றனர்.

நீராழி மண்டப அறை சிற்பங்கள்

நீராழி மண்டபத்தின் கீழ் அத்திவரதர் சயனிக்கும் அறையில் இருந்த சகதி அகற்றப்பட்டு புதுப் பிக்கப்பட்டுள்ளது. அந்த அறை யில், ஆதிசேஷன் மீது கிருஷ் ணர் சிற்பம், அதற்கு மேலே கிருஷ்ணர் புல்லாங்குழுல் ஊதும் காட்சி கொண்ட சிற்பம் மற்றும் வராஹ பெருமாள், லட்சுமி தாயாரை தனது இடது தொடை யில் அமர்த்தியுள்ள சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், அந்த அறையில் இறங்கி செல்ல 6 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள் ளன. மேலும், மிகுந்த சிற்ப வேலைப் பாடுகள் கொண்ட சிங்க தலைகளின் சிற்பங்களும் அங்கு உள்ளன.

அத்திவரதர் சயனம்

நீராழி மண்டபத்தின் கீழ் உள்ள அறையில் அத்திவரதர், மேற்கு திசையில் தலையையும் கிழக்கு திசையில் பாதங்களையும் வைத்து சயனித்திருந்தார். இம்முறையும், அப்படியே அத்திவரதர் பட்டு வஸ்திரங்களுடன் சயனிக்க உள்ளார். அத்திவரதர் வெளியே எடுக்கப்பட்டபோது, அவருடன் சேர்த்து எடுக்கப்பட்ட 7 நாக சிலைகள் தற்போது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் கட்டுப்பாட்டில், கோயிலின் உள்ளே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இவற்றையும் மீண்டும் அத்திவரதருடன் நீராழி மண்டபத்தில் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரு கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

6 mins ago

இந்தியா

30 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்