சுற்றுலா பயணிகள் மனதில் இடம் பிடித்த மதுரை; ஆண்டுக்கு 2.10 கோடி பேர் குவிகின்றனர்

By செய்திப்பிரிவு

ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை

மதுரைக்கு ஆண்டுக்கு 2.10கோடி சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அதனால், 2018 ஆண்டு புள்ளி விவரப்படி மாநில அளவில் மதுரை 2-வது இடத்தில் உள்ளது.

தென் மாவட்டங்களில் மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி, கொடைக்கானல், பழநி, திருச்செந்தூர் உள்ளிட்ட ஊர்கள் மட்டும் அனைத்து சுற்றுலா பயணி களையும் கவரும் முக்கிய சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்களாக உள்ளன.

இதில், மதுரையில் மீனாட்சி கோயில், காந்தி மியூசியம், கூட லழகர் கோயில், நாயக்கர் மகால், வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம், அழகர்கோவில் முக்கிய சுற்றுலா இடங்களாக உள்ளன. மீனாட்சி கோயிலுக்கு வடமாநில பக்தர்கள், வெளி நாட்டுப் பயணிகள் அதிகம் பேர் வருகின்றனர். அதனால், மீனாட்சி கோயிலை மையமாகக் கொண்டே, தென் மாவட்ட சுற்றுலா அமைந்துள்ளது. மதுரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ராமேசுவரம், கொடைக்கானல், பழநி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களுக்குச் செல்கின்றனர். ஆனால், இந்த இடங்களுக்கு எளிதாகச் சென்றுவர விமான வசதியோ, விரைவாகச் சென்று வர பிரத்யேக வாகன வசதிகளோ இல்லை.

ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணத்தால் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தயங்குகின்றனர். அரசு பஸ்களில் சென்றால் நெரிசல், கூடுதல் பயண நேரம், போலி வழிகாட்டிகள் ஆகிய காரணங்களால் ஒருமுறை வந்தவர்கள் மீண்டும் தென் மாவட் டங்களுக்கு வரத் தயங்குகின்றனர். ஆனாலும், புதிய பயணிகள் வருகையால் மதுரைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறையாமல் உள்ளது. 2018-ல் சுற்றுலாப் பயணிகள் வருகை விவரங்கள் சமீபத்தில் வெளி யிடப்பட்டன. இதில், தேசிய அளவில் தமிழகம் முதலிடத்திலும், மாநில அளவில் சென்னை முதலிடம், மதுரை 2-ம் இடத்தில் உள்ளன.

சுற்றுலாத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘2013-ல் 91,761 வெளிநாட்டினரும், 90, 54,286 உள்நாட்டினரும், 2014-ல் 89, 326 வெளிநாட்டினரும், 1,02,62, 671 உள்நாட்டினரும் மதுரை வந்துள்ளனர்.

2015-ம் ஆண்டில் 92,842 வெளிநாட்டினர், 1,01,84, 667 உள்நாட்டினர், 2016-ல் 1,22,111 வெளிநாட்டினர், 1,24, 65,204 உள்நாட்டினர் வந்துள்ளனர். 2017-ல் 2,17,314 வெளிநாட்டினர், 1,56,16,974 வெளிநாட்டினர் மதுரை வந்துள்ளனர். 2018ல் 2,44,182 வெளிநாட்டினர், 2,09,14,415 உள்நாட்டினர் மதுரை வந்துள்ளனர்.

மீனாட்சி கோயிலுக்கு ஆண்டுக்கு 60 லட்சம் முதல் 70 லட்சம் பயணிகள் வருகின்றனர்.

அதுபோல், பொங்கல் பண்டிகை தினங்களில் அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டைக் காண உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதனால், இயல்பாகவே மதுரை 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எப்படி கணக்கிடுகின்றனர் ?

மதுரைக்கு வரும் ஒவ்வொரு சுற்றுலா பயணியையும் சுற்றுலாத்துறை பல்வேறு வகைகளில் கணக்கிடுகிறது.

ஒவ்வொரு சுற்றுலா இடத்திலும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கும் டிக்கெட், மெட்டல் டிடெக்டர் பீப் சவுண்ட் கணக்கீடு, விமான நிலையத்துக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள், பூங்காக்களில் பார்வையாளர் வருகை உள்ளிட்ட ஆதாரங்களை வைத்து, ஒவ்வொரு மாதமும் புள்ளி விவரங்களை சேகரிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டு மார்ச் முதல் அடுத்த மார்ச் வரை மாதந்தோறும் சேகரிக்கும் கணக்கீட்டை, மாநில சுற்றுலாத் துறைக்கு அனுப்புகின்றனர். மாநிலம் முழுவதும் சேகரிக்கப்படும் தகவல்கள், இந்திய சுற்றுலாத் துறைக்கு அனுப்பப்படுகிறது. அவர்கள் அந்த ஒப்பீடுகளை மாநில வாரியாக வரிசைப்படுத்துகின்றனர். தமிழக அளவில் கிடைத்த சுற்றுலாப் பயணிகள் வருகை விவரம் ஒப்பிடப்பட்டு, மாவட்ட வாரியாக வரிசைப்படுத்தப்படுகிறது. இதன்மூலமே, மதுரை சுற்றுலாப் பயணிகள் வருகையில் 2-ம் இடம் பிடித்த விவரம் தெரியவந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

மேலும்