ஆற்றங்கரை பகுதிகளில் தீவிர ரோந்துப் பணி: அலுவலர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு

By செய்திப்பிரிவு

கோவை

கோவை மாவட்டத்தில் பருவமழை முடியும்வரை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் மீட்புப்பணித் துறை அலுவலர்கள் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டார்.

கோவை மாவட்டத்தில் தொட ரும் தென்மேற்குப் பருவமழையை எதிர்கொள்வது தொடர்பான ஆலோ சனைக் கூட்டம், ஆட்சியர் அலு வலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் அமைச்சர் எஸ்.பி.வேலு மணி பேசியதாவது: கோவை மாவட் டத்தில் குடிமராமத்து திட்டத்தில் அனைத்து குளம், குட்டைகள் தூர் வாரப்பட்டதால், மழை பெய்து அவை நிரம்பியுள்ளன. மழையால் மக்கள் பாதிக்காத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சிதிலமடைந்த மற்றும் பழுதடைந்த மழைநீர் வடிகால்கள் மற்றும் சிறுபாலங்களை உடனடி யாக பழுது பார்க்கவும், மழைநீர் வடிகால்களுக்கு இடையே இணைப்பு இல்லாத இடங்களைக் கண்டறிந்து, மழைநீர் இணைப்பு வடிகால்கள் அமைக்கவும் துரித நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களை, பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு ஏதுவாக, சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிக் கட்டிடங்களை தயார் நிலை யில் வைக்க வேண்டும். இவ்வாறு தங்க வைப்போருக்குத் தேவை யான பொருட்களை ஆயத்த நிலை யில் வைக்க வேண்டும்.பொது மக்கள் தங்களால் இயன்றவரை மழைநீர் சேமிப்பு அமைப்புகளை அமைக்க வேண்டும்.

ஒவ்வொரு வட்டம், வட்டாரம் வாரியாக கண்காணிப்பு அலுவலர் கள் நியமிக்கப்பட்டு, மழை, வெள்ள பாதிப்புகளைக் கண்காணிப்பது டன், உரிய தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

துணை ஆட்சியர் நிலையிலான கண்காணிப்பு அலு வலர்கள், பருவ மழை முடியும் வரை, தங்களுக்கு ஒதுக்கப்படும் பகுதிகளிலேயே முகாமிட்டு பணி களை மேற்கொள்ள வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் ஆகியோரும் தங்களது கிராமங்களிலேயே இருந்து, நிவாரண நடவடிக்கை களை மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது.

மழையால் சேதமடைந்துள்ள சாலைகள், பாலங்கள், கட்டிடங் களின் விவரம் சேரிக்கப்பட்டு, மிக விரைவில் சீரமைக்கு திட்ட மதிப் பீடு தயார்செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல, பாது காக்கப்பட்ட குடிநீர் விநியோகம், தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை களிலும் கவனம் செலுத்த வேண்டும்.

நொய்யல், பவானி ஆற்றங் கரைப் பகுதிகளில், வருவாய் மற்றும் பேரிடர் மீட்புப் பணிகள் துறை அலுவலர்கள், தீவிர ரோந் துப் பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

ஆட்சியர் கு.ராசாமணி, எம்எல்ஏ-க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுனன், வி.சி.ஆறுக்குட்டி, வி.பி.கந்தசாமி, மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் மகேஸ்வரன், மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 min ago

க்ரைம்

10 mins ago

இந்தியா

6 mins ago

இந்தியா

36 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்