மழைநீர் கடலில் கலந்து வீணாகாமல் இருக்க அனைத்து நதி, ஓடைகளின் குறுக்கே தடுப்பணை: நீர்வள பாதுகாப்பு பணி தொடக்க விழாவில் முதல்வர் உறுதி

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்

மழைநீர் கடலில் கலந்து வீணாகா மல் இருக்க, தமிழகத்தில் வாய்ப் புள்ள நதி, ஓடைகளின் குறுக்கே தடுப்பணைகளை அமைக்க நட வடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக் கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட 43 பனப்பாக்கம் ஏரியில் நேற்று குடிமராமத்துப் பணிகள் , மஞ்சங் காரனை ஊராட்சிக்கு உட்பட்ட கூரம்பாக்கம் கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கப் பணிகள் தொடக்க விழா நடைபெற்றன.

இதில், முதல்வர் பழனிசாமி பங்கேற்று 43 பனப்பாக்கம் ஏரியை ரூ.29 லட்சம் செலவில் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். கூரம்பாக்கத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் கிராமம் தோறும் சிறுபாசன ஏரிகள், குட்டைகள், ஊருணிகள் போன்ற நீர்நிலைகளின் கொள்ள ளவை அதிகரிக்கும் வகையிலான தமிழ்நாடு நீர் வள ஆதார பாது காப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கப் பணிகளை தொடங்கி வைத்தார்.

5,229 பேருக்கு சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி களை வழங்கினார். விழாவில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பெஞ்சமின், பாண்டியராஜன், தலைமை செயலாளர் சண்முகம், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

விழாவில் முதல்வர் பேசியது: தமிழகத்தில் நிரந்தர வற்றாத ஆறு கள் இல்லை. ஆகவே, பருவ மழையை நம்பியே ஆறுகள், குளங் கள் உள்ளிட்ட நீர் நிலைகள் உள் ளன. பருவமழை காலத்துக்கு முன் நீர் மேலாண்மை பணிகள் மூலம் நீரை சேமிக்க தமிழக அரசு வழிவகை செய்து வருகிறது. அனைத்து ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளை தூர்வாரி, மழைநீரை வீணாக்காமல் சேகரிக்க வேண்டும். அதற்காக, தமிழ்நாடு நீர் வள ஆதார பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற, ஒரு வார காலத்துக்கு தீவிர பிரச்சார இயக்கம் நடைபெறும்.

மழைநீர் கடலில் கலந்து வீணா காமல் இருக்க ஏதுவாக, தமிழகத் தில் வாய்ப்புள்ள நதி, ஓடைகளின் குறுக்கே தடுப்பணைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற் காக 5 ஓய்வு பெற்ற பொதுப்பணித் துறை பொறியாளர்கள் நியமிக்கப் பட்டு, ஆய்வு செய்து நதிகள், ஓடை களில் தடுப்பணைகள் கட்ட நட வடிக்கை எடுக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

48 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்