வேலூர் மக்களவை தேர்தலில் தோல்வி பயத்தால் அமைச்சர்கள் விதிமீறல்- திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றச்சாட்டு 

By செய்திப்பிரிவு

வேலூர் 

வேலூர் மக்களவைத் தேர்தலில் அரசுக்கு தோல்வி பயம் வந்து விட்டதால் அமைச்சர்கள் தேர்தல் விதிகளை மீறி செயல்பட்டனர் என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

இதுகுறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘வேலூர் வாக்குப் பதிவு பெரும்பாலும் அமைதி யாக முடிந்துவிட்டது. வாணியம் பாடியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வந்தவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். அமைச் சர்கள் தேர்தல் காலத்தில் அந்த தொகுதியில் இருக்கக்கூடாது என்பது மரபு. அதையும் மீறி அவர்கள் நடமாடுகிறார்கள். பூட்டை உடைத்து அவர்களை மீட்டுச் செல்வது காவல் துறையினரின் வேலை. அந்த வேலையை அமைச்சர் செய்வது அவரது கவுரவத்துக்கு நல்லதல்ல. அது, அத்து மீறிய செயல். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை மிகப்பெரிய முரண்பாடுகள் இல்லை.

இந்தத் தேர்தலில் ஆளுங் கட்சியின் அத்துமீறலும் இருக் கிறது. ஆம்பூரில் ஜமாத் காரர்கள் ஒரு மண்டபத்தில் இருந் தார்கள். அங்கு, நாங்கள் வாக்கு கேட்டதாலே மண்டபத்தை மூடினால் மசூதியில் வாக்கு கேட்டால் மசூதியை மூடி விடு வார்களா? கே.வி.குப்பத்தை தலை நகராகக் கொண்டு தாலுகா உருவாக்கப்படும் என்று முதல்வர் கூறுகிறார். காரணம், தேர்தல் விதிமுறை இருக்கும்போது கொள்கை முடிவு அறிவிப்பது தவறு.

ஒடுக்கத்தூரில் ஸ்டாலினுக்காக கூட்டம் நடத்த அனுமதி கேட்டோம். அதற்கான ஏற்பாட்டையும் செய்தோம். ஆனால், அந்த இடத்தில் நாங்கள் தான் கூட்டம் நடத்துவோம் என்று கூறி மேடை அமைத்தனர்.

அரசுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. போட்டி போட்டுக் கொண்டு அமைச்சர்கள் விதிமுறை களை மீறி வருகின்றனர்.

காஷ்மீர் விவகாரம் பெரிய அரசியல் பிரச்சினை. அவர் களுக்கு தரப்பட்ட அந்தஸ்து ரத்து செய்யக்கூடாது என்ற வாதம் நீண்ட நெடுங்காலமாக நடந்து வருகிறது. இதை கருத்தறிந்து தெரிவித்திருக்கலாம். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அறிவித்திருப்புது உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. அதை நடைமுறைப்படுத்தும்போது இதன் நோக்கம் தெரியவரும். மத்திய அரசின் உள்நோக்கம் இருக்கிறது. குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறையை கொண்டுவர முயற்சிக்கின்றனர்.

ஒரே நாடு, ஒரே மொழி என்று ஆரம்பிப்பது மிகப்பெரிய ஆபத்தானது. காரணம், இந்தியா என்பது வெள்ளைக்காரனால் உரு வாக்கப்பட்டது. அதை நாங்கள் ஏற்கிறோம். ஆனால், மக்கள் ஒரே இனம், பண்பாடு, மொழி, பழக்க வழக்கங்களை கொண்டவர்கள் இல்லை. சொல்லப்போனால் ஒரே மனநிலையில் இல்லை. இது சாத்தியப்படாது. எதிர் விளைவை ஏற்படுத்தும். ஆட்சியில் இருப் பவர்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

விளையாட்டு

41 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

4 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்