சாத்தூர் இடைத்தேர்தல்  வெற்றியை எதிர்த்த வழக்கு: அதிமுக வேட்பாளர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சாத்தூர் இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கில், அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 கடந்த மே 18-ம் தேதி நடத்தப்பட்ட சட்டமன்ற இடைத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளரான சீனிவாசன்  போட்டியிட்டார்.  இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜவர்மன்  456 வாக்குகள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், அவரது மனுவில், “வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி செய்ததால், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும், VVPAD ஒப்புகை சீட்டுகளையும் முழுமையாக எண்ணி ஒப்பிட வேண்டும், தேர்தலில்  குளறுபடியில் செய்து அதிமுக வேட்பாளர் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார். 

இந்த வழக்கு  நீதிபதி சுப்பிரமணிய பிரசாத் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சாத்தூர் இடைத் தேர்தல் வழக்கு தொடர்பாக அதிமுக வேட்பாளர் ராஜவர்மன், மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோர் ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்