பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு உதவிய பெண் காவல் ஆய்வாளர், காவல் ஆணையர்: பொது மக்கள் பாராட்டு

By செய்திப்பிரிவு

சென்னை

சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக பணியில் இருப்பவர் ராஜேஸ்வரி. இவர் நேற்று முன்தினம் இரவு, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நள்ளிரவு அதே பகுதி கொன்னூர் நெடுஞ்சாலை அருகே செல்லும்போது ஒரு வயதான பெண் தனியாக நின்று அழுது கொண்டிருந்தார்.

காவல் ஆய்வாளர் அருகில் சென்று விசாரித்தபோது அவரின் மகளான ஷீலாவுக்கு தலைப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வாகனம் ஏதா வது கிடைக்குமா? என்று பார்க்க இங்கு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

உடனடியாக நம்மாழ்வார் பேட்டையில் உள்ள அவரது வீட் டுக்குச் சென்ற காவல் ஆய்வா ளர் ராஜேஸ்வரி அங்கு பிரசவ வலியில் ஷீலா துடித்துக் கொண்டி ருப்பதைப் பார்த்து, உடனடியாக 108-க்கு போன் செய்து ஆம்பு லன்ஸுக்கு ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் அந்தத் தெருவுக்குள் 108 ஆம்புலன்ஸ் வர இயலாத காரணத்தால் இவரது போலீஸ் வாகனத்தில் ஷீலாவை ஏற்றிக் கொண்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று அங்கு ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்.

மருத்துவமனையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் ஷீலா வுக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. சரியான நேரத்தில் செய்த உதவிக்காக காவல் ஆய்வாளர் ராஜேஸ் வரியை ஷீலாவின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்கள் பாராட்டினர்.

காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் செயலுக்கு சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனும், பொது மக்களும் பாராட்டியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

28 mins ago

உலகம்

49 mins ago

வாழ்வியல்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

மேலும்