சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு: சென்னை செங்கல்வராயர் அறக்கட்டளை நடத்துகிறது

By செய்திப்பிரிவு

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு பி.டி.லீ.செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை சார்பில் சென்னையில் வரும் 28-ம் தேதி அன்று நடைபெற உள்ளது.

கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பி.டி.லீ.செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சியை அளிக்க முன் வந்துள்ளது. 

இதுகுறித்து பி.டி.லீ செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை இயக்குநரும், தமிழக அரசின் முன்னாள் முதன்மைச் செயலாளருமான எஸ்.எஸ்.ஜவஹர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஃபவுண்டேஷன் கோர்ஸ் ஃபார் யுபிஎஸ்சி, சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த பயிற்சியை பி.டி.லீ.செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை இலவசமாக வழங்க உள்ளது. 

இதற்கான இலவச அறிமுக வகுப்பு வரும் 28-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் ஆகஸ்ட் 4-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு நாட்களிலும் காலை 10.30 மணிக்கு சென்னை வேப்பேரி, ஈ.வி.கே. சம்பத் சாலையில் அமைந்துள்ள பி.டி.லீ.செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் வளாகத்தில் உள்ள போட்டித் தேர்வுக்கான சிறப்புப் பள்ளியில் நடத்தப்பட உள்ளது.

ஆர்வமும் விருப்பம் உள்ள மாணவர்கள் ஜூலை 28, ஆகஸ்ட் 4 ஆகிய இரு நாட்களிலும் காலை 10.30 மணிக்குள்ளாக நேரில் பதிவு செய்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம். தொலைபேசி எண்கள் 044-26430029 மற்றும் 8668038347 மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம்'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

48 secs ago

விளையாட்டு

54 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்