சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், வேளச்சேரி மார்க்கத்தில் 65 மின் ரயில் சேவை ரத்து: கூட்ட நெரிசலால் மக்கள் அவதி

By செய்திப்பிரிவு

சென்னை

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் வேளச்சேரி தடங்களில் 65 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டனர்.

சென்னை கடற்கரை - வேளச் சேரி பறக்கும் ரயில் தடத்திலும், எழும்பூர் - பல்லாவரம் இடையே தாம்பரம் தடத்திலும் நேற்று தண் டவாளப் பராமரிப்பு பணிகள் நடந்தன. இதனால், இந்த 2 தடங்களிலும் மொத்தம் 65 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.

இருப்பினும், சென்னை கடற் கரை - தாம்பரம் இடையே இரு மார்க்கத்திலும் காலை 11 மணி முதல் பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரயில் சேவை பயணிகளின் தேவையை முழு அளவில் பூர்த்தி செய்ய முடியவில்லை. 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்களுக்கு ஒரு ரயில் சேவை இயக்கப்பட்டதால், பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்பட்டனர். மின்சார ரயில்களும் தாமதமாக இயக்கப் பட்டதால், கிண்டி, மாம்பலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. சீரான ரயில் சேவை கிடைக்காததால், பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

இதுபற்றி பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘பராமரிப்பு பணியை தவிர்க்க முடியாது. இதை கருத் தில் கொண்டுதான் சிறப்பு ரயில் கள் அறிவிக்கப்பட்டன. அதுவும் போதிய அளவில் இல்லாததால், பயணிகள் மிகவும் அவதிப்படுகின் றனர். இதேபோல இன்னும் 6 ஞாயிற் றுக்கிழமைகளுக்கு மின்சார ரயில் கள் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவு ரயில் தடத்தில் கூடுதல் மின்சார ரயில்களையும், கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் வேளச் சேரி மார்க்கங்களில் கூடுதல் மாநக ரப் பேருந்துகளையும் இயக்கினால், பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்