கோத்தகிரி அருகே யானை மிதித்து விவசாயி பலி

By செய்திப்பிரிவு

கோத்தகிரி, அரக்கோடு கிராமத்தில் விவசாயி ஒருவரை யானை மிதித்ததால் பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி, அரக்கோடு பகுதியைச் சேர்ந்த விவசாயி பாலன்(73).  இவர் பொம்மன் காபி தோட்டம் அருகே நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வந்தார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) மதியம் விவசாயத் தோட்டத்துக்குச் சென்ற பாலன், இன்று (புதன்கிழமை) காலை வரை வீடு திரும்பவில்லை. சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் சுற்றிலும் தேடினர்.

அப்போது தோட்டத்துக்கு அருகே உள்ள காட்டில் பாலனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரது உறவினர் கொடுத்த தகவலின் பேரில் கோத்தகிரி சரகர் ஸ்ரீனிவாசன் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது, யானை மிதித்து இறந்ததற்கான தடயங்கள் இருந்தன.

இதையடுத்து வனத்துறையினர் பாலனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தமிழக அரசின் முதற்கட்ட நிவாரண நிதியாக ரூ.50,000 வழங்கினர். இத்தகைய சம்பவங்களில் உயிரிழப்போருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

- ஆர்.டி.சிவசங்கர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

5 mins ago

ஆன்மிகம்

23 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்