5-வது சர்வதேச யோகா சாம்பியன்ஷிப் விழா: பெய்ஜிங்கில் நடைபெற்றது

By செய்திப்பிரிவு

கீப் யோகா சார்பில் ஐந்தாவது சர்வதேச யோகா சாம்பியன்ஷிப் மற்றும் மாஸ்டர்ஸ் யோகா விழா சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஜூன் 21 முதல் 25 வரை நடைபெற்றது.

கீப் யோகா, டபிள்யு.எஸ்.ஒய்.எப்., ஹெச்.கே.ஒய்.எப்., தயாள் லெஷர் அண்டு கல்சுரல் அசோசியேஷன் ஆகிய அமைப்புகள், சீனாவில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தின.

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த கனிசோர்ன் நம்சாய்சாவாஸ்வாங் சாம்பியன் ஆப் சாம்பியனாக தேர்வு செய்யப்பட்டு ரூ.6 லட்சத்து 40 ஆயிரம் பரிசாக பெற்றார். ஹாங்காங்கைச் சேர்ந்த செங் சிங் யு இரண்டாமிடம் பிடித்து ரூ.3 லட்சத்து 85 ஆயிரம் பரிசு வென்றார். இந்தியாவைச் சேர்ந்த பூஜா படேல் மூன்றாமிடம் பிடித்து ரூ.1 லட்சத்து 92 ஆயிரம் பரிசு பெற்றார். 6 பல்வேறு வயது பிரிவுகளில் வென்றவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

உலகப் புகழ் பெற்ற டி.எ.கிருஷ்ணன், ஷர்மிளா ஜாய்ஸ், யுவா தயாளன், கண்ணன், நிரஞ்சனா மூர்த்தி உள்ளிட்ட 50 யோகா ஆசிரியர்கள் இணைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீன யோகா மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

2016-17-ம் ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவில் குஜராத் மற்றும் பெங்களூரில் நடைபெறும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்