சென்னையில் சில நாட்களுக்கு மழை தொடரும்

By செய்திப்பிரிவு

மழை மேகங்கள் திரண்டு வருவதால் சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. காலையில் வெயில் அதிகமாக இருந்தாலும் கடல் காற்று சரியான நேரத்தில் தொடங்கும் நாட்களில் மழை பெய்து வருகிறது. மாதவரத்தில் பொன்னியம்மன் மேடு, வி.ஒ.சி நகர், சர்மா நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்தது. பிற பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நகரில் மேலும் 3 நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறும்போது, “மழை மேகங்கள் திரண்டு வருவதால் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அடுத்த 3 நாட்களுக்கும் இதே போல மழை நீடிக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

வணிகம்

23 mins ago

தமிழகம்

7 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

52 mins ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்