திருவண்ணாமலையில் 120 பவுனை பையில் போட்டு கதவில் தொங்கவிட்ட கார் ஓட்டுநர் கைது

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கார் ஒட்டுநரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து மேலும் 19 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவண்ணாமலை கொச மடத் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன் என்பவர் வீட்டில் கடந்த 2-ம் தேதி 120 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக போலீஸில் புகார் கொடுக் கப்பட்டது.

போலீஸார் விசாரித்து வந்த நிலையில், ஆனந்தன் வீட்டுக் கதவில் நேற்று முன்தினம் 120 பவுன் நகைகள் ஒரு பையில் போடப்பட்டு மாட்டப்பட்டிருந் தது. போலீ ஸாரின் சந்தேக வலையில் இருந்த ஆனந்தனின் கார் ஓட்டுநர் அப்துல் முஜித் (36) என்பவரை தனிப் படை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், ஆனந்தன் வீட்டில் முஜித் 139 பவுன் நகைகள் திருடியது தெரியவந்தது. ஏற்கெனவே கிடைத்த 120 பவுன் நகையுடன், முஜித் பதுக்கி வைத்திருந்த 19 பவுன் நகையையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஆனந்தன் வீட்டில் கார் ஓட்டுந ராக அப்துல் முஜித் 7 ஆண்டுகள் வேலை செய்துள்ளார். கடந்த 1 ஆண்டுக்கு முன்பு வேலைக்கு வராமல் நின்றுவிட்டார். கடன் தொல்லையில் தவித்த அப்துல் முஜித், கடனை அடைப்பதற்காக கொள்ளையடித்துள்ளார்.

ஆனந்தன் வீட்டில் 120 பவுன் நகை திருடுபோனதாக நாளிதழ்களில் வந்த செய்தியை அவர் படித்துள்ளார். அதன் படியே 120 பவுன் நகையை வீட்டில் போட்டுவிட்டால் மீதம் இருக்கும் 19 பவுன் நகைகள் தனக்கு போதும் என்றும், போலீஸாரும் தொடர்ந்து விசாரிக்காமல் இருப்பார்கள் என நினைத்திருக்கிறார். ஆனால், கடைசியில் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டார்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

11 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

17 mins ago

ஆன்மிகம்

27 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வணிகம்

9 hours ago

மேலும்