மதிமுக, கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட 6 கட்சிகள் இணைந்து புதிய இயக்கம் தொடக்கம்: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆக. 13-ல் போராட்டம்

By செய்திப்பிரிவு

மதிமுக, கம்யூனிஸ்ட்கள், விடு தலைச் சிறுத்தைகள் உட்பட 6 கட்சி கள் இணைந்து ‘மக்கள் நலன் காக் கும் கூட்டு இயக்கம்’ என்ற பெயரில் புதிய அணியை உருவாக்கியுள் ளன. இந்த இயக்கத்தின் சார்பில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஆகஸ்ட் 13-ல் போராட்டம் நடத்தப்படுகிறது.

இது தொடர்பாக சென்னையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மதிமுக பொதுச்செய லாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம் யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விடுதலைச் சிறுத்தை கள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ எம்.எச்.ஜவாஹிருல்லா, காந்திய மக்கள் இயக்க பொருளாளர் பா.கும ரய்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பிறகு நிருபர் களிடம் ஜி.ராமகிருஷ்ணன், வைகோ ஆகியோர் கூறியதாவது:

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, காந்திய மக்கள் இயக்கம் ஆகிய 6 கட்சிகளும் ‘மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம்’ என்ற பெயரில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம்.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான மத்திய அமைச்சர்களும், பாஜகவைச் சேர்ந்த மாநில முதல் வர்களும் பதவி விலக வேண்டும். நிலம் கையகப்படுத்தும் சட்டம், குழந்தை தொழிலாளர் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வேண் டும். மதக் கலவரங்களை திட்ட மிட்டு உருவாக்கும் சங்பரிவார் அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். யாகூப் மேம னுக்கு அளிக்கப்பட்ட மரண தண் டனையை ரத்து செய்ய வேண்டும்.

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 13-ம் தேதி சென்னை, தஞ் சாவூர், மதுரை, திருநெல்வேலி, ஈரோடு ஆகிய 5 நகரங்களில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெறும். மத்திய பாஜக அரசைக் கண் டித்து செப்டம்பர் 2-ம் தேதி நடக்க வுள்ள நாடு தழுவிய வேலைநிறுத் தப் போராட் டத்தில் 6 கட்சிகளும் பங்கேற்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தேமுதிக, தமாகாவுக்கு அழைப்பு

‘‘இந்த கூட்டு இயக்கத்தில் தேமுதிக, தமாகா ஆகிய கட்சி களும் இணைய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்’’ என்று வைகோவும், ஜி.ராமகிருஷ் ணனும் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

6 mins ago

சுற்றுலா

18 mins ago

தமிழகம்

49 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்