பி.எல். கலந்தாய்வில் தொழிற்கல்வி பிரிவு மாணவர்கள் தகராறு

By செய்திப்பிரிவு

சட்டப் படிப்புக்கான கலந்தாய்வில் தொழிற்கல்வி பிரிவில் காலியிடங்கள் இல்லாததால் அப்பிரிவு மாணவர்கள் பல்கலைக்கழக அதிகாரிகளிடம் தகராறு செய்தனர்.

ஐந்தாண்டு பி.ஏ.,எல்.எல்.பி. படிப்புக்கான கலந்தாய்வு கடந்த திங்கள்கிழமை சென்னை யில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் தொடங் கியது. முதல் நாளன்று பொதுப் பிரிவின் கீழ் உள்ள இடங்களுக்கு கலந்தாய்வு நடந்தது. சட்டப் படிப்பில் தொழிற்கல்வி பிரிவு மாணவர் களுக்கு 4 சதவீத இடங்கள் (மொத்தம் 42 இடங்கள்) ஒதுக்கப்படுகின்றன. இந்த இடங்கள் அனைத்தும் முதல் கலந்தாய்விலேயே நிரம்பி விட்டன.

இந்த நிலையில், 3-வது நாளான நேற்று எம்பிசி, பிசி முஸ்லிம் பிரிவு மாணவ-மாணவிகள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையே, தொழிற்கல்வி பிரிவில் உள்ள இடங்கள் அனைத்தும் முதல் நாள் கலந்தாய்விலேயே நிரம்பியது தெரியாமல், குறிப்பிட்ட கட் ஆப் மதிப்பெண் பெற்றுள்ள அப்பிரிவைச் சேர்ந்த எம்பிசி மாணவர்கள் நேற்று கலந்தாய் வுக்கு வந்தனர்.

வாக்குவாதம்

கலந்தாய்வின்போது, தொழிற்கல்வி பிரிவில் காலியிடங்கள் இல்லை என்ற தகவல் தெரியவந்தபோது அவர்கள் அங்கு பணியில் இருந்த சட்டப் பல்கலைக்கழக அதிகாரிகளுடன் தகராறு செய்தனர். ஓசி வகுப்பினருக் காக முதல் நாளன்று நடத்தப் பட்ட கலந்தாய்வில் மற்ற வகுப்பினருக்கான இடங்கள் எப்படி காலியாகும்? என்று மாணவர்களும் உடன் வந்த பெற்றோரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், கலந் தாய்வு மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்றைய கலந்தாய்வு தொழிற்கல்வி பிரிவினருக்கு அல்லாமல் பொதுவான பிரிவில் உள்ள எம்பிசி, பிசி முஸ்லிம் வகுப்பினருக்கான கலந்தாய்வு என்ற விஷயத்தைச் சொல்லி மாணவர்களையும் பெற்றோரையும் அமைதிப்படுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

6 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

கல்வி

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்