அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு மாவட்ட வாரியாக கட் ஆப் மதிப்பெண் நிர்ணயம்

By செய்திப்பிரிவு

அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு மாவட்ட வாரியாக கட் ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட உள்ளது.

4,362 காலியிடங்கள்

அரசு மேல்நிலை மற்றும் உயர் நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் வகையில் மே 31-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. அரசு தேர்வுத்துறை நடத்திய இந்தத் தேர்வை 7 லட்சத்து 32 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். விடைத்தாள் மதிப்பீட்டுக்கான ஆரம்பநிலைப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

முதல்கட்டமாக எழுத்துத் தேர்வு அடிப்படையில் ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதாச்சாரத்தில் நேர்காணலுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். காலியிடங்கள் பற்றிய அறிவிப்பு மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்ட நிலையில், மேற்கண்ட விகிதாச்சார முறை மாவட்ட அளவில் இருக்குமா? அல்லது மாநில அளவில் இருக்குமா? என்ற சந்தேகம் தேர்வெழுதியவர்கள் இடையே நிலவுகிறது. இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறிய தாவது:

ஆய்வக உதவியாளர் பணிக் கான காலியிடங்கள் மாவட்ட அளவில்தான் நிரப்பப்படும். எனவே, விடைத்தாள் மதிப்பீட்டு பணியை மாவட்ட வாரியாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பிட்ட மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கு ஏற்ப ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதாச் சார அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் நேர்காணலுக்கு அனுமதிக் கப்படுவார்கள்.

எனவே, கட் ஆப் மதிப்பெண் மாவட்ட அளவில்தான் நிர்ணயிக்கப் படும். இதனால், கட் ஆப் மதிப் பெண் மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபடும். குறிப்பிட்ட மாவட்டத்தில் உள்ள காலியிடங்களின் எண் ணிக்கை, அந்த மாவட்டத்தில் தேர்வெழுதியவர்களின் மதிப்பெண் நிலை ஆகியவற்றுக்கு ஏற்ப கட் ஆப் மதிப்பெண் அமைந்திருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கட் ஆப் மதிப்பெண் மாவட்ட அளவில் நிர்ணயிக்கப்படுவதால் ஒரு மாவட்டத்தில் குறிப்பிட்ட மதிப்பெண் எடுத்த ஒரு விண் ணப்பதாரர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பார். வேறு மாவட் டத்தில் இதே மதிப்பெண் பெற்ற தேர்வருக்கு நேர்காணல் வாய்ப்பு வராமல் போகலாம் என்பது குறிப் பிடத்தக்கது.

ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு தனியார் பயிற்சி மையங்கள் சார்பில் உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) வெளியிடப்பட்டு வரும் நிலையில், அரசு தேர்வுத்துறை சார்பில் அதுபோன்று கீ ஆன்சர் ஏதும் வெளியிடப்படுமா? என்று தேர்வுத் துறையினரிடம் கேட்டபோது, “ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு கீ ஆன்சர் எதுவும் வெளியிடப்படாது” என்று பதிலளித்தனர்.

இதற்கிடையே, எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணை கணக்கில் கொள்ளாமல் நேர்காணல் அடிப் படையிலேயே ஆய்வக உதவி யாளர்களை தேர்வு செய்யும் பள்ளிக் கல்வித் துறையின் முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு பள்ளிக்கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

சினிமா

42 mins ago

இந்தியா

54 mins ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்