தனியார் கல்லூரிகளில் பணியாற்றும் முதுநிலை பொறியியல் பட்டதாரிகளின் நிலை கேள்விக்குறி: ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிப்பு

By செய்திப்பிரிவு

தனியார் பொறியியல் கல்லூரி களில் பணியாற்றும் முதுநிலை பொறியியல் பட்டதாரிகள் நிலை கேள்விக்குறியாகி வருவதாக ‘தி இந்து உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு ஆதங்கப்பட்டனர்.

இதுகுறித்து அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது, “தனியார் பொறியியல் கல்லூரி களில் முதுநிலை பொறியியல் (எம்.இ) பட்டதாரிகள் பணியாற்று கின்றனர். அவர்களில் அனுபவம் உள்ளவர்களின் பணிக்கு கடந்த சில ஆண்டுகளாக ஆபத்து ஏற்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் அனுபவம் உள்ள முதுநிலை பட்டதாரிகளை வெளி யேற்றும் செயல் நடைபெறுகிறது. மாணவர்கள் எண்ணிக்கை குறை வாக இருப்பதால் ஆட்குறைப்பு நடவடிக்கை என்று நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கை ஒருபுறம் என்றால், அனுபவம் உள்ள முதுநிலை பொறியியல் பட்டதாரி களின் ஊதியத்தை கணக்கில் கொண்டும், ஆட்குறைப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அனுபவம் உள்ளவர்களுக்கு ரூ.40 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. அதனால் அவர்களை வெளியேற்றிவிட்டு, அனுபவம் இல்லாத முதுநிலை பொறியியல் பட்டதாரிகளை பணிக்கு அமர்த்துகின்றனர். அவர்களுக்கு ரூ.12 ஆயிரம் ஊதியம் கிடைக்கிறது.

நிர்வாகத்திடம் இருந்து திடீரென அழைப்பு வருகிறது. நீங்கள், நாளை முதல் பணிக்கு வர வேண்டாம் என்று கூறுகின்றனர். அடுத்தது அவர்கள் எங்கு செல்வார்கள். அவர்களது குடும்பத்தின் நிலை கேள்விக்குறியாகிவிடுகிறது. இந்த நிலை தமிழகம் முழுவதும் நிலவு கிறது” என்றார்.

இதுகுறித்து கல்வியாளரும், திருவண்ணாமலை எஸ்கேபி கல்விக் குழுமத் தலைவருமான கு.கருணாநிதி கூறும்போது, “அனுபவம் உள்ள விரிவுரையாளர் மற்றும் பேராசிரியர்களை வெளி யேற்றும் செயல், தற்கொலைக்கு சமமானது. செலவை காரணமாக கொண்டு, அவ்வாறு நடவடிக்கை எடுப்பது என்பது தவறான பாதை யில் அந்த கல்லூரி நிர்வாகம் செல்கிறது என்றுதான் அர்த்தம். அனுபவம் உள்ள ஆசிரியர்கள்தான் கல்லூரிக்கு பொக்கிஷம்” என் றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

55 mins ago

சினிமா

3 mins ago

விளையாட்டு

17 mins ago

சினிமா

26 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்