கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

By செய்திப்பிரிவு

அரசு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பயிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபின மாணவ, மாணவியருக்கு அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த கல்வி உதவித்தொகை பெறவிரும்பும் மேற்கூறிய மாணவர்களின் பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். உதவித் தொகைக்கான விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து, அவர்கள் பயிலும் கல்லூரி நிறுவனத்திலேயே வழங்கலாம். விண்ணப்பப் படிவத்துடன் வங்கி கணக்கு எண், ஆதார் எண் விவரங்களையும் கட்டாயம் இணைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பப் படிவங்களை, www.tn.gov.in/bcmbcdept என்ற இணையதளம் முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

சுற்றுச்சூழல்

44 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்