அரசியலில் கவனம் செலுத்த நடிப்புக்கு விரைவில் முழுக்கு?- சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தகவல்

By கே.கே.மகேஷ்

“அரசியலில் தீவிர கவனம் செலுத்த இருப்பதால் முக்கிய முடிவை எடுத்திருக்கிறேன். இன் னும் இரண்டு மாதங்களில் அந்த முடிவை அறிவிப்பேன்” என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் தெரிவித்தார்.

மதுரையில் 'தி இந்து' தமிழ் நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக, புதிய தமிழகம், கம்யூ னிஸ்ட்டுகள் உள்ளிட்ட 8 கட்சிகள் வெளியேறிவிட்டன. நீங்கள் மட்டும் விடாப்பிடியாக இருக்கக் காரணம் என்ன?

கொள்கைப் பிடிப்புதான் காரணம். அதிமுக நல்லாட்சி தரும், தமிழகத்தில் மின் தட்டுப்பாட்டை நீக்கும் என்று சொன்னோம். அதைச் செய்துள்ளார்கள். இலவச லேப்டாப், தாலிக்குத் தங்கம் உட்பட 177 வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருக்கிறார்கள். பிறகு ஏன் வெளியேற வேண்டும்? இன்னொரு விஷயம், சமக கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்கிற இயக்கம்.

அதிமுக அரசை நீங்கள் அளவுக்கு அதிகமாக பாராட்டுவதாக சொல்கிறார்களே?

நல்லது செய்தவர்களைத் தட்டிக் கொடுக்கும் மனப்பக்குவம் இருந் தால்தான் அவர்கள் மேலும் சிறப் பாக செயல்படுவார்கள். அவர்கள் ஏதாவது தவறு செய்தால்தானே குற்றம் சொல்ல முடியும்? அரசி யல்வாதிகள்தான் அரசைக் குறை சொல்கிறார்களே தவிர, மக்கள் அல்ல.

வருங்கால முதல்வர் சரத்குமார் என்ற கோஷத்தை இப்போது உங்கள் தொண்டர்கள்கூட சொல்வது இல்லையே?

ஒரு இயக்கம் தொடங்கப் படுவதே மாற்றத்துக்காகத்தானே. எனவே அந்த இயக்கத்தின் தலை வன் முதல்வராக வேண்டும், ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும் என்ற எண்ணம் தொண்டர்களின் மனதில் ஓடிக் கொண்டேதான் இருக்கும்.

நடிகர் சங்கத் தலைவர், சமக தலைவர், அதிமுக ஆதரவாளர் இந்த 3 பொறுப்புகளில் எது உங்களுக்கு மிகவும் பிடித்தமானது?

எல்லாவற்றிலுமே ஆர்வமாக இருக்கிறேன். `பல வேலைகளைச் செய்பவன் எதிலும் சாதிக்க மாட் டான்’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. ஆனால், ஒரே நேரத்தில் 10 வேலை களைச் செய்யக்கூடிய திறமையை ஆண்டவன் எனக்கு கொடுத் திருக்கிறான். இப்போதுகூட உங் களிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே, போனில் ஒரு பிரச்சி னையை சொன்னால் அதைத் தீர்த்துவிட்டு, விட்ட இடத்தில் இருந்து உங்களுடன் பேச முடியும்.

அரசியலில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால், கட்சியை கொஞ்சமாவது வளர்த்திருக்கலாமே?

ஆமாம். அதை மனதில் வைத்துத்தான் நானொரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறேன். நடிப்பதைக் கைவிடலாமா? நடிக்காவிட்டால் வருமானத்துக்கு என்ன செய்வது? திரைப்படம் தயாரிக்கலாமா? வேறு ஏதாவது தொழில் செய்யலாமா என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன். இன்னும் இரண்டு மாதங்களில் அந்த முடிவை அறிவிப்பேன்.

இந்தத் தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடுவீர்களா? எத்தனை சீட் உங்கள் இலக்கு?

சீட் இலக்கு எல்லாம் தேவை யி ல்லை. நாட்டுக்கு சேவை செய்வது தான் எங்கள் இலக்கு. தனி சின்னத் தில் போட்டியிடவே விரும்புகிறோம்.

மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளை உதறிவிட்டு, அதிமுக தனித்துப் போட்டியிட்டது. சட்டப் பேரவைத் தேர்தலிலும் அவர்கள் அதே முடிவை எடுத்தால், உங்கள் நிலை என்ன?

தேர்தல் அறிவித்த பிறகு முதல்வர் ஜெயலலிதா என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று பார்ப்போம். அதன் பிறகு இதைப் பற்றி பேசலாம்.

“எங்கள் தென்காசி எம்எல்ஏ படத்துல வர்றாரு, விளம்பரத்துல வர்றாரு. ஆனா தொகுதிப் பக்கம் மட்டும் வர்றதேயில்லை’ என்று சமூக வலைத் தளங்களில் கலாய்க்கிறார்களே?

எத்தனை எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதிக்குள் உள்ள ஊராட்சித் தலைவர்களை சந்தித்திருக்கிறார்கள்? நானோ அவர்களைச் சந்தித்து தேவை என்ன என்று அறிந்துதான் நிதியையே ஒதுக்குகிறேன். தென்காசியில் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பாலத்தை கட்டி முடித்தது, புறவழிச்சாலை அமைப்பதற்கான நில ஆர்ஜிதத்தைத் தொடங்கியது என்று நிறைய வேலைகளை செய்திருக்கிறேன். தென்காசி அரசு மருத்துவமனைக்கு, என் சொந்த செலவில் ரூ.17 லட்சத்தில் பூங்கா அமைத்துக் கொடுத்துள்ளேன். தொகுதியில் மக்களிடமிருந்து பெறப்படும் ஒவ்வொரு மனுவுக்கும் உரிய பதில் அனுப்பப்படுகிறது.

பொது வாழ்க்கையிலும் நடிப்பதுதான் அரசியல்வாதிக்கான கூடுதல் தகுதியாகிவிட்ட காலம் இது. பாவம் விஜயகாந்த், பொதுவாழ்க்கையில் நடிக்கத் தெரியாத நடிகர் என்று சொல்லலாமா?

என்னது பொதுவாழ்க்கையில் நடிக்கணுமா? அதைப் பற்றி எனக்குத் தெரியாது. ஏன்னா நான் பொது வாழ்க்கையிலும் சரி, சொந்த வாழ்க்கையிலும் சரி நடிப்பது கிடையாது. சினிமாவில் மட்டும்தான் நடிக்கிறேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்