அப்ரண்டீஸ் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட பிஹார் இளைஞர்கள் கைது

By செய்திப்பிரிவு

ஆவடியில் ராணுவ தளவாட தொழிற்சாலையில் நடைபெற்ற அப்ரண்டீஸ் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக பிஹாரைச் சேர்ந்த இளைஞர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் ராணுவத்துக்கு தேவையான பீரங்கி உள்ளிட்ட தளவாடங்கள் தயாரிக்கும் கனரக ஊர்தி தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இங்கு கடந்த மார்ச் 1-ம் தேதி அப்ரண்டீஸ் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் ஆயிரத்து 200 பேர் பங்கேற்றனர். அவர்கள் தேர்வு எழுத சென்ற போது கைரேகை பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தேர்வு எழுதியவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று நடைபெற்றது.

அப்போது அவர்களது கைரேகை ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. இதில், பிஹாரைச் சேர்ந்த அமர்ஜித் குமார், ரோஹித் ராஜ், பங்கஜ் குமார், ராகுல் குமார், வினோத் குமார், ரோஹித் குமார் ஆகியோரது கைரேகைகள் ஒத்துப் போகவில்லை. அவர்கள் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுலா

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்