பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை: சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது - முதல் நாளில் விளையாட்டு வீரர்கள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

பொறியியல் மாணவர் சேர்க்கையில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அண்ணா பல்கலைக் கழகத்தில் தொடங்குகிறது. முதல் நாளன்று விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்கிறார்கள்.

பொறியியல் படிப்புக்கு விண் ணப்பித்த மாணவர்களின் தர வரிசைப் பட்டியல் ஜூன் 19-ம் தேதி வெளியிடப்பட்டது. கல்லூரியை தேர்வுசெய்வதற்கான பொது கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது.

இதற்கிடையே, சிறப்பு பிரிவினரான விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கு 28-ம் தேதி யும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 29-ம் தேதியும் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.

பிஇ, பிடெக். படிப்புகளில் விளையாட்டுப்பிரிவின் கீழ் 500 இடங்கள் உள்ளன. இதற்கு 1,850 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். அவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23-ம் தேதி தொடங்கி நேற் றுடன் முடிவடைந்தது.

இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப் பட்டபடி, விளையாட்டு வீரர்களுக் கான கலந்தாய்வு அண்ணா பல் கலைக்கழகத்தில் நாளை (ஞாயிற் றுக்கிழமை) நடக்கிறது. மறுநாள் (திங்கள்கிழமை) மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.

கலந்தாய்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

35 mins ago

இந்தியா

41 mins ago

தமிழகம்

48 mins ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

50 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

5 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்