ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளில் சேர ஜூலை 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவர் விடுதிகளில் நடப்பு ஆண்டில் தங்கி படிக்க மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மாணவ, மாணவியர் விடுதிகள் இயங்கி வருகின்றன. இங்கு உணவு மற்றும் இருப்பிடம் இலவசமாக வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில் புதிதாக மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

விடுதியில் சேர விரும்பும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்டோர் மற்றும் இதர வகுப்பினைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தகுதியுள்ள மாணவ, மாணவியர் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகம் அல்லது சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம் விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 7-ம் தேதிக்குள் வழங்க வேண்டும். கல்லூரி மாணவர்கள் ஜூலை 15-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை வழங்க வேண்டும்.

இலங்கைத் தமிழருக்கு இடம்

இவ்விடுதிகளில் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகள் தங்கி கல்வி பயில ஏதுவாக ஒவ்வொரு விடுதிகளிலும் கூடுதலாக 5 இடங்களை ஒதுக்கீடு செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதை அந்த மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு பயன்பெறலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

உலகம்

6 mins ago

வணிகம்

22 mins ago

வாழ்வியல்

18 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

ஆன்மிகம்

36 mins ago

விளையாட்டு

41 mins ago

கருத்துப் பேழை

5 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்