லஞ்சம் வாங்கும் பொறியாளர்கள் குறித்து பேனர் வைத்த கட்டிட ஒப்பந்ததாரர்கள் மீது வழக்கு பதிவு

By செய்திப்பிரிவு

லஞ்சம் வாங்கும் பொதுப்பணித் துறை பொறியாளர்கள் குறித்த பேனர் வைத்ததற்காக, பொதுப் பணித்துறை கட்டிட ஒப்பந்த தாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள எழிலகம் கட்டிட வளாகத்துக்குள் கடந்த 6-ம் தேதி காலையில் ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில் லஞ்சம் வாங்கும் பொதுப் பணித்துறை பொறியாளர்களின் பெயரை வெளியிடப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுப்பணித்துறை கட்டிட ஒப்பந்ததாரர்கள் சார்பில் இந்த பேனர் வைக்கப்பட்டிருந்தது. பேனர் வைத்த இரண்டு நாட்களில் லஞ்சம் வாங்கும் பொறியாளர்களின் பட்டியலை கட்டிட ஒப்பந்ததாரர்கள் வெளியிட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில் பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் சங்கரலிங்கம் சார்பில் பேனர் வைத்தவர்கள் மீது அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின்பேரில் பேனர் வைத்ததாக கட்டிட ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் குணமணி, செயலாளர் பிரகாஷ், ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி, கவுரவ தலைவர் லோகநாதன், பொருளாளர் குமார் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 326-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்