போலீஸ்காரர் லத்தியால் அடித்ததால் விபரீதம்: சாலை தடுப்பு சுவரில் பைக் மோதி இளைஞர் பலி - உறவினர்கள் மறியல்; போலீஸ் வாகனம் உடைப்பு

By செய்திப்பிரிவு

கே.கே.நகரில் போலீஸ்காரர் லத்தி யால் அடித்ததால் ஒரே பைக்கில் சென்ற 3 பேர் சாலைத் தடுப்பில் மோதி விழுந்தனர். இரும்புக்கம்பி குத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். இதைக் கண்டித்து மறியலில் ஈடுபட்ட மக்கள், போலீஸ் வாக னத்தை அடித்து நொறுக்கினர்.

சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்தவர் செல்வம் (19). பிளம்ப ராக வேலை செய்துவந்தார். விருகம் பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் விக் னேஷ் (20), ராஜா (19). இருவரும் ஐடிஐ படிக்கின்றனர். நண்பர் களான 3 பேரும் நேற்று பிற்பகல் ஒரே பைக்கில் கே.கே.நகர் 80 அடி சாலையில் சென்று கொண்டிருந் தனர். பைக்கை விக்னேஷ் ஓட்டினார்.

வாகன தணிக்கையில் ஈடு பட்டிருந்த போக்குவரத்து போலீ ஸார், ஒரே பைக்கில் 3 பேர் வருவதைப் பார்த்து, அவர்களை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால், விக்னேஷ் வண்டியை நிறுத்தாமல் வேகமாகச் சென்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு போலீஸ்காரர், கையில் வைத் திருந்த லத்தியால் பைக்கை ஓட்டிச் சென்ற விக்னேஷின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் நிலைதடுமாறிய விக்னேஷ், சாலை தடுப்புச் சுவரில் பைக்கை மோதினார். 3 பேரும் கீழே விழுந்தனர். தடுப்புச் சுவரின் மேலே செடிகளை சுற்றி வைக்கப்பட்டிருந்த கம்பி, செல்வத் தின் வயிற்றில் குத்திக் கிழித்தது. விக்னேஷ் வயிற்றின் ஓரத்தில் கம்பி குத்தியது. ராஜாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

படுகாயம் அடைந்த செல்வம் சாலை ஓரத்தில் விழுந்து வலியால் துடித்தார். அதிக ரத்தம் வெளி யேறிய நிலையில் உயிருக்கு போரா டிக் கொண்டிருந்தார். அருகிலேயே விக்னேஷ் அதிர்ச்சியில் மயங்கிக் கிடந்தார். போக்குவரத்து போலீஸாரும், பொதுமக்களும் வேடிக்கை பார்த்தார்களே தவிர, யாரும் உதவி செய்ய முன்வர வில்லை. சுமார் அரை மணி நேரம் கடந்த பிறகே இருவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றி அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் செல்வம் உயிரிழந்தார்.

தகவல் அறிந்த செல்வத்தின் உறவினர்களும், அப்பகுதி மக் களும் விபத்து நடந்த இடத்தில் திரண்டு 80 அடி சாலையில் மறி யலில் ஈடுபட்டனர். சம்பவத்துக்கு காரணமான போலீஸார் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அங்கிருந்த போக்கு வரத்து போலீஸ் வாகனத்தை அடித்து உடைத்தனர். சில போலீ ஸாரையும் தாக்கினர். பதற்றம் ஏற்பட்டதால் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப் பட்டது.

இது குறித்து அறிந்த சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ், வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்கு வரத்து காவல் ஆய்வாளர் சற் குணம், போலீஸ்காரர் சிவானந்தம் ஆகியோரை காத்திருப்போர் பட்டிய லுக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து இணை ஆணையர் நாகராஜன் விசாரணை நடத்தி அறிக்கை கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மாஜிஸ்திரேட் விசா ரணைக்கும் பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 mins ago

சுற்றுலா

5 mins ago

வணிகம்

5 hours ago

இந்தியா

30 mins ago

சினிமா

25 mins ago

தமிழகம்

33 mins ago

இந்தியா

54 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்