சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு தடை: பிரதமருக்கு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் கடிதம்

By செய்திப்பிரிவு

திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை தடை செய்ய வேண் டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, அடையாறு புற்று நோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதி யுள்ள கடிதத்தில், “திரைப்படங் களில் புகைபிடிக்கும் காட்சிகள் வரும் போது ‘புகைபிடிப்பது உடல் நலத்திற்கு கேடு’ என்று போடப் படுகிறது. இதை திரையில் காட்டக் கூடாது என்று சில திரைப்பட இயக்குநர்கள் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறையிடம் கோரி யுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளது. அவர்களின் கோரிக் கையை ஏற்கக்கூடாது. மேலும் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை தடைசெய்ய வேண் டும்” என்று கூறப்பட்டுள்ளது.

பிரதமருக்கு அவர் எழுதியுள்ள மற்றொரு கடிதத்தில், “நாட்டில் 40 சதவீதம் புற்றுநோய்க்கு புகையிலை பொருட்களே காரணமாக உள்ளது. புகையிலை கட்டுப்பாடுக்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தில் புகையிலை நிறுவனங்கள் தொடர்பு மற்றும் அவர்களின் குறுக்கீடுகள் புகையிலை தொடர்பான முடிவு களை எடுக்கும்போது இருக் கக்கூடாது என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. ஆனால் பொது சுகாதார கமிட்டியில் புகையிலை நிறுவனம் மற்றும் அதனை சார்ந்தவர்கள் உள்ளனர். இத னால் அவர்களுக்கு சாதக மான முடிவுகளையே தெரி விக்கின்றனர். அவர்களை கமிட்டியில் இருந்து நீக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

55 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்