மின் கம்பியில் சிக்கிய பாராசூட் வீராங்கனை: ராணுவ பயிற்சியில் விபரீதம்

By செய்திப்பிரிவு

தாம்பரம் ராணுவ பயிற்சி மையத்தில் பாராசூட் வீராங்கனை ஒருவர் மின் கம்பியில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

சென்னை தாம்பரத்தில் இந்திய விமான படை பயிற்சி மையம் உள்ளது. நேற்று காலையில் விமான படை மைதானத்தில் வைத்து பள்ளி மாணவ, மாணவி களுக்கு பாராசூட் பயிற்சி அளிக்கப் பட்டது. இந்திய விமானப் படை சார்பில் இந்த பயிற்சி அளிக்கப்படு கிறது. மோகன சந்திரிகா என்ற பெண் பயிற்சி அளித்தார். பின்னர் ஹெலிகாப்டரில் உயரத்துக்கு சென்ற மோகன சந்திரிகா அங்கிருந்து பாரசூட் மூலம் கீழே குதித்தார். அந்த நேரத்தில் காற்று பலமாக வீசியதால், விமான படை மைதானத்தில் தரையிறங்க வேண்டிய மோகன சந்திரிகா, காற்றில் பறந்து மைதானத்துக்கு வெளியே சென்றார்.

இதனால் பதறிப்போன மாண வர்களும், மற்ற அதிகாரிகளும் மோகன சந்திரிகாவை பின் தொடர்ந்து மைதானத்துக்கு வெளியே ஓடினர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக மோகன சந்திரிகா மின் கம்பியில் சிக்கினார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. விரைந்து வந்த விமானப்படை வீரர்கள் மின் இணைப்பை துண்டித்து மோகன சந்திரிகாவை மீட்டனர். பின்னர் விமான படை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்