பொறியியல் படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டு ‘லேட்ரல் என்ட்ரி’ முறையில் அதிரடி மாற்றம்: கணிதத்தை விருப்ப பாடமாக படித்த பிஎஸ்சி பட்டதாரிகளுக்கும் வாய்ப்பு

By ஜெ.கு.லிஸ்பன் குமார்

பொறியியல் படிப்பில் நேரடி யாக 2-ம் ஆண்டு சேரும் “லேட் ரல் என்ட்ரி” முறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கணிதத்தை ஒரு விருப்பப் பாடமாக படித்த பி.எஸ்சி பட்டதாரி களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி கள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என 570-க்கும் மேற்பட்ட பொறி யியல் கல்லூரிகள் இயங்கி வருகின் றன. இவற்றில் ஏறத்தாழ 2 லட்சம் பிஇ, பிடெக் இடங்கள் அண்ணா பல்கலைக்கழக பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன.

4 ஆண்டு காலம் கொண்ட பொறியியல் படிப்பில், பிளஸ் 2 முடித்தவர்கள் கலந்தாய்வு மூலம் அல்லது நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேருவது ஒருமுறை. இன் னொரு முறை ‘லேட்ரல் என்ட்ரி’ என அழைக்கப்படுகிறது. அதா வது, பொறியியலில் டிப்ளமா (பாலிடெக்னிக் படிப்பு) முடித்த வர்களும், பி.எஸ்சி. கணித பட்டதாரி களும் நேரடியாக 2-ம் ஆண்டில் சேரலாம். பொறியியல் படிப்பில் மொத்தமுள்ள இடங்களில் 20 சதவீத இடங்கள் இதுபோன்று ‘லேட்ரல் என்ட்ரி’ முறையில் நிரப்பப் படுகின்றன. ‘லேட்ரல் என்ட்ரி’யில் பி.எஸ்சி கணித பட்டதாரிகளுக்கு 900 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

இந்த நிலையில், ‘லேட்ரல் என்ட்ரி’ முறையில் வரும் ஆண்டு முதல் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அதன்படி, இதுநாள்வரையில் பொறியியலில் டிப்ளமா முடித்தவர்கள், பி.எஸ்சி கணித பட்டதாரிகள் மட்டுமே லேட்ரல் முறையில் சேரமுடிந்தது. இனிமேல், பி.எஸ்சி கணித பட்டதாரிகள் மட்டுமின்றி பிளஸ் 2 அல்லது பி.எஸ்சி படிப்பில் கணி தத்தை ஒரு விருப்பப் பாடமாக எடுத்துப் படித்தவர்களும் சேரலாம்.

அதேபோல், ‘லேட்ரல் என்ட்ரி’ முறை மாணவர் சேர்க்கைக்கு பொறியியல் டிப்ளமா படிப்பு அல்லது பி.எஸ்சி கணித படிப்பில் இறுதி ஆண்டு (கடைசி 2 செமஸ் டர்கள்) மதிப்பெண்தான் தகுதி மதிப்பெண்ணுக்கு கணக்கில் எடுக்கப்பட்டு வந்தது. இனிமேல், ஒட்டுமொத்த மதிப்பெண்ணும் (அனைத்து செமஸ்டர்களும்) கருத்தில் கொள்ளப்படும்.

இதுவரையில், பி.எஸ்சி. கணித பட்டதாரிகளுக்கு 900 இடங்கள் ஒதுக்கப்பட்டு வந்தன. இந்த சிறப்பு ஒதுக்கீடு முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. அதேநேரத்தில் அவர்கள் பொதுவான இடங் களில் சேர தடை ஏதும் கிடையாது. பொறியியல் டிப்ளமா முடித்த வர்களுக்கு முதலில் கலந்தாய்வு நடத்தப்பட்டு இடங்கள் நிரப்பப் படும்.

அதில் ஏற்படும் காலியிடங் களுக்கு மட்டுமே கணிதம் படித்தவர்கள் பரிசீலிக்கப்படுவார் கள். அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) வழிகாட்டுதலின்படி இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

‘லேட்ரல் என்ட்ரி’ முறைக்கான இந்த புதிய மாணவர் சேர்க்கை நடைமுறை வரும் கல்வி ஆண்டு (2015-16) முதல் பின்பற்றப்படும் என்று தமிழக அரசின் உயர் கல்வித்துறைச் செயலர் அபூர்வா வெளியிட்ட ஓர் அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து பொறி யியல் கல்லூரிகளுக்கும் மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையர் பிரவீண்குமார் தகவல் அனுப்பியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

13 mins ago

சினிமா

23 mins ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்