நாளை வணிகர் மாநாடு: பால் விநியோகம் குறையும்

By செய்திப்பிரிவு

வணிகர் தின மாநாடு நடப்பதையொட்டி சில்லறை விற்பனை கடைகளில் ஆவின் மற்றும் தனியார் பால் விநியோகம் நாளை குறைவாக இருக்கும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்க தலைவர் எஸ்.ஏ. பொன்னுசாமி தெரிவித்தார்.

சென்னையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

தமிழகம் முழுவதும் 5-ம் தேதி (நாளை) வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருக்கும். சென்னை மற்றும் தஞ்சையில் நடக்கும் வணிகர் சங்க மாநாடுகளில் பால் முகவர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதனால் சில்லறை விற்பனை கடைகளில் பால் பாக்கெட்கள் குறைவாகவே விநியோகம் செய்யப்படும். கடைகளுக்கு 40 சதவீத அளவுக்குதான் பால் விநியோகம் செய்யப்படுவதால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் நாளை காலை 8 மணிக்குள் தேவையான அளவு பால் பாக்கெட்களை வாங்கி வைத்துக்

கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு பொன்னுசாமி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

36 mins ago

ஜோதிடம்

43 mins ago

தமிழகம்

6 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

உலகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

11 hours ago

மேலும்