மேலும் 3 பள்ளிகளில் தற்காப்புக் கலை பயிற்சி: பயிற்சியாளராகும் முன்னாள் மாணவிகள்

By செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட திருவான்மியூர் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு ‘க்ரவ் மாகா’ என்ற பயிற்சி கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ‘க்ரவ் மாகா’ என்பது, எதிரியின் பலவீனத்தை அறிந்துகொண்டு ஆபத்துக் காலத்தில் சமயோசிதமாக தப்பித்தலைக் கற்றுக் கொடுக்கும் தற்காப்புக் கலையாகும். இப்பயிற்சி வஜ்ரா தொண்டு நிறுவனத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த ஆண்டு மேலும் பல பள்ளிகளுக்கு இப்பயிற்சி விரிவுபடுத்தப்படவுள்ளது. “நுங்கம்பாக்கம் மேல்நிலைப்பள்ளி, புளியந்தோப்பு மேல்நிலைப்பள்ளி மற்றும் அண்ணாநகர் மேல்நிலைப்பள்ளியில் வரும் கல்வியாண்டு முதல் இது அறிமுகப்படுத்தப்படவுள்ளது” என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இப்பயிற்சிக்கு இந்த ஆண்டு முதல் மாணவிகளே பயிற்சி யாளராக இருப்பார்கள். இதுபற்றி வஜ்ரா தொண்டு நிறுவனத்தின் பயிற் சியாளர் ஸ்ரீராம் கூறும்போது, “மாநகராட்சிப் பள்ளிகளில் பத் தாவது அல்லது பிளஸ் 2முடித்த மாணவிகளை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இரண்டு வார பயிற்சியில் 20 செய் முறைகள் இலவசமாக கற்றுக் கொடுக்கப்படும். பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப் படும். இதன் மூலம் அவர்கள் மாநகராட்சிப் பள்ளியில் ஒரு வருடத்துக்கு பயிற்சியாளராக பணியில் சேர முடியும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

வணிகம்

7 hours ago

சுற்றுச்சூழல்

39 mins ago

சுற்றுலா

51 mins ago

கல்வி

8 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்