ஜெ. வழக்கில் மேல்முறையீடு: சுப்பிரமணியன் சுவாமி உறுதி

By செய்திப்பிரிவு

'ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் தவறினால், அடுத்த மாதம் நான் நீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்வேன்' என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிடும்போது, "ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் தவறினால் ஜூன் 1-ம் தேதிக்குப் பின்னர் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்வேன். இவ்விவகாரத்தில் இனியும் நான் கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

நேற்று முன் தினம் அவர் தனது ட்விட்டரில், "உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பில் கணக்கு பிழை இருப்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன். அதற்குள் ஜெயலலிதா முதல்வரானால் அவர் மீண்டும் பதவி விலக வேண்டியிருக்கும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறாக, சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீடு குறித்து தனது கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்