அரசுகளின் வேளாண்மை விரோத கொள்கைகளே பருத்தி விவசாயி தற்கொலைக்கு காரணம்: பெ.மணியரசன் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

வலங்கைமான் அருகே அண்மை யில் பருத்தி விவசாயி தற்கொலை செய்து கொண்டதற்கு மத்திய, மாநில அரசுகளின் வேளாண்மை விரோத கொள்கைகளே காரணம் என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் குற்றம்சாட்டி யுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித் துள்ளதாவது:

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள சித்தன்வாழ்வூர் கிராமத்தைச் சேர்ந்த பருத்தி விவசாயி ராஜாராமன், சில நாட்களுக்கு முன்பு பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

அவரது குடும்பத்தையும் உறவினர்களையும் காவிரி உரிமை மீட்புக் குழு நேற்று முன்தினம் சந்தித்து விசாரித்தபோது, ராஜாராமன் தனியார் நிதி நிறுவனத்தில் 24 சதவீத வட்டிக்கு ரூ.45,000, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 14 சதவீத வட்டிக்கு ரூ.31,000 நகைக் கடன் பெற்றிருப்பது தெரியவந்தது.

மத்திய அரசு 4 சதவீத வட்டியில் விவசாயக் கடன் அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்தது. ஆனால், அதனைக் கண்காணித்து, நடைமுறைப்படுத்தாததால் விவசாயிகள் அதிகமான வட்டிக்கு கடன் வாங்கும் நிலை உள்ளது.

மேலும், சிறிய மழைக்குகூட வேர் அழுகிவிடக் கூடிய வெளிநாட்டு நிறுவனங்களின் மரபணு மாற்று பருத்தி விதைகளை அவர் சாகுபடி செய்துள்ளதும் தெரியவந்தது.

ராஜாராமனின் இந்த நிலைக்கு, மத்திய, மாநில அரசுகளின் வேளாண்மை விரோதக் கொள்கைகள்தான் காரணம் என்பதை அறிய முடிந்தது.

எனவே, தற்கொலை செய்துகொண்ட ராஜாராமன் குடும்பத்துக்குத் தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு மாத வாழ்வூதியம் வழங்க வேண்டும். அவருடைய 3 குழந்தைகளின் படிப்புச் செலவுகளை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

9 mins ago

வெற்றிக் கொடி

20 mins ago

விளையாட்டு

17 mins ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

48 mins ago

உலகம்

59 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்