ஜெ. வழக்கில் இன்று திமுக இறுதி வாதம்

By இரா.வினோத்

தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னி லையில் இன்று (வியாழ‌க் கிழமை) விசாரணைக்கு வருகிற‌து.

சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் 16-வது நாளாக தன்னுடைய‌ இறுதிவாதத்தை இன்றும் தொடர இருக்கிறார். நீதிபதி டி'குன்ஹா அரசு வழக்கறிஞருக்கு இறுதி வாதம் நிகழ்த்தக் கொடுத்த கால அவகாசம் இன்றுடன் முடிவடை கிறது. எனவே பவானி சிங் வழக்கு குறித்த முக்கிய ஆதாரங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்து இன்றுடன் தன்னுடைய இறுதிவாதத்தை அரசு வழக் கறிஞர் நிறைவு செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 3-ம் தரப்பான திமுக பொது செயலாளர் அன்பழகன் தரப்பு வழக்கறிஞர், தங்களுடைய தரப்பின் இறுதி வாதத்தை எழுத்துப் பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வுள்ளார். அன்பழகனின் வழக்கறி ஞர்கள் குமரேசன், சரவணன், ராமசாமி, பாலாஜி சிங், மற்றும் நடேசன் அடங்கிய 5 பேர் குழு அதற்கான இறுதிக்கட்டப் பணி களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வழக்கை இறுதிக்கட்டத் திற்கு நகர்த்தியதில் திமுக பொதுசெயலாளர் அன்பழகனின் தரப்பினருக்கு முக்கியப் பங்கு இருப்பதால், அவர்களின் இறுதி வாதத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வரும் 19-ம் தேதி முதல் சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலி தாவின் வழக்கறிஞர் தங்களுடைய இறுதிவாதத்தை தொடங்க வேண் டும் என நீதிபதி டி'குன்ஹா கூறி யிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

34 mins ago

தமிழகம்

50 mins ago

கல்வி

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்