நீதிபதிகள் ஓய்வு வயது தொடர்பாக சட்ட ஆணையத்தை அணுக உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்: பொதுநலன் வழக்கு முடித்துவைப்பு

By செய்திப்பிரிவு

நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது நிர்ணயத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சட்ட ஆணையத்தையும் மத்திய அரசையும் அணுகலாம் என்று மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அறிவியல், மருத்துவ, உளவியல் ரீதியிலான அடிப்படையில் நிர்ணயம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இம்மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி சஞ்ஜய்கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு நடைபெற்றது. மத்திய அரசு தரப்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் சு.சீனி வாசன் ஆஜரானார்.

மனுதாரர் வாதம்

விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை 62-ஆக காரணமில்லாமல் தன்னிச் சையாக நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக மனுதராரர் கூறுகிறார். மேலும், திறமையின் உச்சத்தில் இருக்கும் போது உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறுகின்றனர். அக்காலிப் பணியிடங்களால் நீதிமன்றப் பணிகள் பாதிக்கின்றன. அத் துடன், சிந்திக்கும் திறன் இருக் கும்வரை நீதிபதியாக கண்டிப் பாக பணியாற்ற அனுமதிக்க வேண்டும். அதை சட்டம் நிர்ணயிக்கக் கூடாது எனவும் மனுதாரர் தனது வாதத்தில் தெரிவித்துள்ளார்.

வழக்கு முடிப்பு வைப்பு

சிந்திக்கும் திறனின் அடிப்படையில் ஒரு நீதிபதிக்கும் மற்றொரு நீதிபதிக்கும் ஓய்வு பெறும் வயது வேறுபடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.இது பிரச்சினையை உருவாக்கக் கூடும். அதனால், நீதி விசாரணை செய்து இதை தீர்மானிப்பதற்கு பதிலாக, இக்கோரிக்கைகளை பரிசீலனை செய்வதற்காக சட்ட ஆணையத்துக்கும், மத்திய அரசுக்கும் மனுதாரர் அனுப்பலாம் எனக் கூறி வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

31 mins ago

கல்வி

24 mins ago

இந்தியா

21 mins ago

தமிழகம்

27 mins ago

ஓடிடி களம்

34 mins ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

மேலும்