திருச்சியில் தற்கொலைக்கு முயன்ற முன்னாள் ஆர்எம்ஓ-விடம் போலீஸார் விசாரணை

By செய்திப்பிரிவு

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் தூக்க மாத்திரைகளை விழுங்கி தற் கொலைக்கு முயன்ற முன்னாள் ஆர்எம்ஓ (மருத்துவமனை நிலைய மருத்துவர்) நேருவிடம், திருச்சி பொன்மலை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் ஆர்எம்ஓ-வாக பணியாற்றிய நேரு, இம்மாதம் 6-ம் தேதி அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அரசு மருத்து வமனை மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பின், குணமடைந்து வீடு திரும்பிய அவர் தற்போது ஓய்வில் உள்ளார்.

மருத்துவமனை ஆர்எம்ஓ பொறுப்பிலிருந்து விடுவிக்கப் பட்ட நேரு, தனக்கு அரசியல் பிரமுகர்கள் கொடுத்த அழுத் தம் காரணமாகவே தூக்க மாத்திரைகளை விழுங்கியதாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து திருச்சி பொன் மலை போலீஸார், கடந்த 8-ம் தேதி அவரிடம் விசாரணை நடத்தியது நேற்று தெரியவந் தது. அந்த விசாரணையின் போது, மன அழுத்தம் காரண மாக மருத்துவமனைக்கு வந்து தூக்க மாத்திரைகளை விழுங்கியதாக தெரிவித் துள்ளார். விசாரணைக்கு அவர் போதிய ஒத்துழைப்புத் தரவில்லை என போலீஸ் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 mins ago

சினிமா

49 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்