பாதுகாப்பற்ற உணவுகளால் பரவும் 200 வகை நோய்கள்- தோட்டம் முதல் தட்டு வரை உணவை பாதுகாப்போம்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

இன்று உலக சுகாதார தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

கடந்த 1948-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி உலக சுகாதார மையம் தொடங்கப்பட்டதை தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளை உலக சுகாதார தினமாக உலக சுகாதார நிறுவனம் கடைப்பிடித்து வருகிறது.

மனிதனின் ஆரோக்கிய வாழ் வுக்கு சத்துள்ள, பாதுகாப்பான உணவு அவசியம். ஆனால், இன்று பசுமைப் புரட்சி என்ற பெயரால் விளைச்சலை அதிகரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனம், பூச்சிக்கொல்லி மருந்துகளால் லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் மலடாகி வருகின்றன. அந்த நிலங்களில் விளைவிக் கப்படும் காய்கறிகளும், உணவுப் பொருட்களும் விஷமாகி மனிதர் களுக்கு பல்வேறு நோய்களை உருவாக்கி வருகின்றன.

உணவு உற்பத்தி இயந்திர மயமாக் கப்பட்டதாலும், அவற்றின் விற்பனை உலகமயமாக்கப்பட்டதாலும் உணவுப் பொருட்களின் தரமும் குறைந்துவிட்டது. பாதுகாப்பற்ற, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட் களில் இருக்கும் பாக்டீரியா, வைரஸ் நுண் கிருமிகள், வேதிப்பொருட்கள் மனிதனுக்கு 200 வகையான நோய்களை ஏற்படுத்துகின்றன. அதில் மிக முக்கியமானது, இன்று மனித உலகை அச்சுறுத்திவரும் புற்றுநோய். அதனாலேயே, இந்த ஆண்டு உலக மக்களின் ஆரோக் கியத்தைப் பாதுகாக்க ‘தோட்டம் முதல் தட்டு வரை உணவை பாதுகாப்போம்’ என்ற கோஷத்தைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த உலக சுகாதார நிறுவனம் திட்ட மிட்டுள்ளது.

இதுகுறித்து திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழக மருத்துவ அலுவலர் ரங்கநாதன் அண்ணாமலை, கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் சுரேஷ்பாலன் ஆகியோர் கூறிய தாவது: ‘‘உணவே மருந்து என அன்று சித்தர்கள் அருளிச் சென்றனர். ஆனால், இன்று உணவே விஷமாகி விட்டது. இந்நிலையில், சித்தர்களின் உணவு சித்தாந்தத்தை தற்போது உலகளாவிய கருத்தாக, இந்த ஆண்டு உலக சுகாதார தினத்தின் நோக்கமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

முன்பெல்லாம், தொலைதூரப் பயணம் செல்லும்போது மட்டுமே ஹோட்டல் உணவை சாப்பிட்டனர். பொட்டலம் கட்டி சாப்பாடுகளை எடுத்துச் சென்றனர். இன்று சட்னி, சாம்பார் தொடங்கி சாதம், இறைச்சி வரை பிளாஸ்டிக் டப்பா, பாலித்தீன் பைகளில் அடைக்கப்பட்டு விற் பனைக்கு வந்து விட்டது. மைக்ரோ ஓவன்களில் சூடுபடுத்தி எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்கின்றனர்.

இந்த பதப்படுத்தப்பட்ட உணவு கள் கெடாமல் இருக்க அதிக அளவு உப்பு, வேதிப் பொருட் களை சேர்க்கின்றனர்.

இந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதால் இரைப்பை புற்று நோய், பெருங்குடல் புற்றுநோய், நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

உணவு உற்பத்தி, பதப்படுத்துவது, விற்பனை செய்வது, வீடு வரை எடுத்து சென்று சாப்பிடும் உணவை கையாளுவதில் தர நிர்ணயம், சுத்தம், பாதுகாப்பு இருக்க வேண்டும்.

பர்கர், பிரைடு ரைஸ், புரோட்டோ உள்ளிட்ட பாஸ்ட் புட், நடைபாதை உணவுகளை தவிர்க்க வேண்டும். பொதுவாக இரவில் புரோட்டா சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மைதா மாவில் தயாரான புரோட்டா, குருமாவை சாப்பிட்டால் இதய நோய்களை ஏற்படுத்தும்.

பெண்கள் மனது வைத்தால்…

அந்தக் காலத்தில் பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு உள்ளிட்ட சத்துள்ள தானியங்களை அரைத்து மாவாக்கி இனிப்பு கலந்து குழந்தை களுக்கு வழங்கினர். அதனால், குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது.

இப்போது எல்லா கடைகளிலும் சுலபமாக கிடைக்கும் பாக்கெட்டு களில் அடைக்கப்பட்ட மாவுப் பொருட்கள், சிப்ஸ் வகையறாக் களை வாங்கி கொடுக்கின்றனர்.

உணவை மருந்தாக்கும் வல்லமை பெண்கள் கையில்தான் உள்ளது. அதனால், வீட்டிலேயே பாதுகாப்பான முறையில் எளிமை யான, சத்தான உணவுகளை தயாரிக்க பெண்கள் பழகிக் கொள்ள வேண்டும்.

இதை இன்று உணரா விட்டால், பின்னாளில் ஆரோக்கியம் கெட்டு மருத்துவமனைகளில் லட்சக் கணக்கான ரூபாய் செலவழிக்க வேண்டிய நிலை வரும்.

டி.வி.யில் வரக்கூடிய விளம்பரங்களில் டின், பாக்கெட், பாஸ்ட் புட் உணவுகளை பார்த்து குழந்தைகள் கேட்பார்கள். அவற்றை வாங்கிக் கொடுக்கக் கூடாது. பாதுகாப்பற்ற உணவே, குழந்தைகளுக்கு 40 சதவீதம் நோய் ஏற்படக் காரணம்.’’

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் கெடாமல் இருக்க அதிக அளவு உப்பு, வேதிப் பொருட்களை சேர்க்கின்றனர். இந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதால் இரைப்பை புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படுகிறது. பாதுகாப்பற்ற உணவே 40 சதவீதம் நோய் ஏற்படக் காரணம்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

50 mins ago

இந்தியா

20 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்