பாடப் புத்தகங்கள் விலை உயர்கிறது: 2 முதல் 4 மடங்கு அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் பள்ளி பாடப் புத்தகங்களின் விலை உயர்த்தப்பட உள்ளது. பல புத்தகங்களின் விலை 2 முதல் 4 மடங்கு வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சடித்து விற்பனை செய்யும் புத்தகங்களை விலை கொடுத்து வாங்க வேண்டும்.

காகித விலை உயர்வு, அச்சடிப்பு மற்றும் விற்பனை, நிர்வாகச் செலவினங்கள் காரணமாக வரும் கல்வி ஆண்டில் (2015-16) பள்ளிப் பாடப்புத்தகங்களின் விலை உயர்த்தப்பட இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் டி.சபீதா அறிவித்துள்ளார்.

அதன்படி, ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரையிலான முப்பருவ பாடப்புத்தகங்கள் மற்றும் எஸ்எஸ்எல்சி, பிளஸ் ஒன், பிளஸ் டூ பாடப்புத்தகங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. பிளஸ் டூ மனையியல் புத்தகத்தின் விலை 4 மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, பிளஸ் ஒன் தமிழ் பாடப்புத்தகம் ரூ.12.50-ல் இருந்து ரூ.30 ஆகவும், வரலாறு புத்தகம் ரூ.23-ல் இருந்து ரூ.50 ஆகவும், கணினி அறிவியல் தொகுதி-2 ரூ.30-லிருந்து ரூ.70 ஆகவும் உயர்ந்துள்ளது.

பிளஸ் டூ ஆங்கில புத்தகம் ரூ.28-லிருந்து ரூ.60 ஆகவும், கணக்கு புத்தகம் (தொகுதி 1, தொகுதி-2) ரூ.27-லிருந்து ரூ.80 ஆகவும், தாவரவியல் புத்தகம் ரூ.27-லிருந்து ரூ.70 ஆகவும், விலங்கியல் புத்தகம் ரூ.24-லிருந்து ரூ.90 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்