விஜயகாந்த் முயற்சிக்கு பல்வேறு கட்சியினர் பாராட்டு

By செய்திப்பிரிவு

கர்நாடக அரசு மேகேதாட்டு பகுதியில் அணைகளை கட்டுவது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேசுவதற்காக தேமுதிக தலைமை யில் தமிழக எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் பிரதமரை இன்று சந்திக்க உள்ளனர். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் 12.30 மணிக்கு நேரம் ஒதுக்கியுள்ளார்.

விஜயகாந்த் எடுத்துள்ள இப்புதிய முயற்சி குறித்து முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின் (திமுக) :

பிரதமரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்திக்கும் போது திமுக மாநிலங்களவைக் குழு தலைவர் கனிமொழி எம்.பி. மற்றும் திருச்சி சிவா எம்.பி. ஆகியோர் உடன் செல்வார்கள். மேகேதாட்டு பிரச்சினை தொடர் பாக கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிகளும் போராட்டம் நடத்துகின்றன. ஆனால் அப்படியொரு நிலை தமிழகத்தில் இல்லாதது வேதனையளிக்கிறது

தமிழிசை சவுந்தரராஜன் (பாஜக):

தமிழக எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் எடுத்து வரும் முயற்சியை வரவேற் கிறோம். தமிழக நலனுக்கு எதிராக தமிழக பாஜக ஒருபோதும் செயல்படாது.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்கிரஸ்):

பிரதமர் மோடியை சந்திக்க செல்லும் குழுவில் காங்கிரஸ் சார்பில் பிரதிநிதி ஒருவர் கலந்து கொள்வார். அனைத்துக் கட்சி களையும் ஒருங்கிணைக்க வேண்டியது முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கடமை. முதல்வர் செய்ய வேண்டிய வேலையை எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் செய்து கொண்டிருக்கிறார்.

ஜி.கே.வாசன் (தமாகா):

தமிழக பிரச்சினைகளுக்காக எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் இந்திய பிரதமரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்திக்கவுள்ளார். தமாகா பிரதிநிதி ஒருவரும் விஜயகாந்துடன் செல்வார்.

வைகோ (மதிமுக):

விஜயகாந்த் முயற்சிக்கு மதிமுக முழு ஆதரவு அளிக்கிறது. விஜயகாந்துடன் செல்லும் அனைத்துக்கட்சி குழு வுடன் மதிமுக சார்பில் முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி செல்வார்.

தொல்.திருமாவளவன் (விசிக):

தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் எதிரான அநீதிகள் தொடர்பாக ஆளுங் கட்சியினர் உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி பிரதமரை சந்தித்திருக்க வேண்டும். அவர்கள் செய் யாததை தேமுதிக தலைவர் விஜயகாந்த் செய்வது பாராட் டத்தக்கது. விஜயகாந்துடன் நானும் சென்று பிரதமரை சந்திக்கவுள்ளேன்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

10 mins ago

இந்தியா

50 mins ago

கருத்துப் பேழை

43 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

கல்வி

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்