ஆந்திர சிறையில் உள்ள 3000 தொழிலாளர்களை மீட்க தமிழக அரசு அக்கறை காட்டவில்லை: தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

ஆந்திர சிறையில் உள்ள 3 ஆயிரம் தொழிலாளர்களை மீட்க தமிழக அரசு அக்கறை காட்டவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டினார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நேற்று நடைபெற்ற மாவட்ட செயற்குழுக் கூட்டத் தில் பங்கேற்ற அவர், செய்தி யாளர்களிடம் கூறும்போது, ‘‘தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுகவினரை எதிர்த்து தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பேசினாலும், அந்த கட்சியை மக்கள் ஏற்கமாட்டார்கள். அதற்கு காரணம், காங்கிரஸ் ஊழலில் திளைத்த கட்சி. ஊழலை தட்டிக் கேட்கும் தகுதியும், தைரியமும் பாஜகவுக்கு மட்டுமே உள்ளது.

தமிழகத்தில் பால், நெல், மருந்து, மின்சார ஒப்பந்தம் என அனைத்திலும் ஊழல் நடந்துள்ளது. அக்ரி கிருஷ்ணமூர்த்தி சிறை சென்ற ஒன்றே போதும், தமிழக அதிகாரிகள் நேர்மையாக செயல் பட முடியவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம். மேலும், சகாயம் கிரானைட் விசாரணைக் குழு தாசில்தார் மற்றும் புகைப் படக்காரர் ஆகியோரின் மர்ம மரணம் பல சந்தேகங்களை எழுப்பு கிறது. ஆந்திராவில் 20 தமிழக கூலித் தொழிலாளர்களை சுட்டுக் கொன்றுள்ளனர். அதில், மத்திய அரசு கடுமையாக நடவடிக்கை எடுத்து உண்மையை வெளிவரச் செய்யும். ஆந்திர சிறையில் உள்ள 3 ஆயிரம் தமிழக கூலித் தொழி லாளர்களை காப்பாற்ற தமிழக அரசு அக்கறை காட்டவில்லை. தமிழ கத்தில் வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் படித்த பட்டதாரிகள் கூலி வேலைக்காக ஆந்திராவுக்கு செல்கின்றனர். ஆந்திர சிறையில் உள்ள தமிழக தொழிலாளர்களை மீட்க வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

10 mins ago

இந்தியா

12 mins ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

க்ரைம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

கார்ட்டூன்

2 hours ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்