ஈவிகேஎஸ் இளங்கோவனுடன் ப.சிதம்பரம் சந்திப்பு

By எம்.சரவணன்

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் - முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

அதனை உறுதிப்படுத் தும் வகையில் 4 மாதங் களுக்குப் பிறகு சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று ப.சிதம்பரம் வந்தார்.

கடந்த நவம்பர் 2-ம் தேதி தமிழக காங்கிரஸ் தலைவராக இளங்கோவன் பொறுப்பேற்றதில் இருந்து, அவருக்கும் ப.சிதம்பரம் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் வலுத்து வந்தது.

இந்நிலையில், சமரச முயற்சியாக கடந்த 18-ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் சிதம்பரம் ஆதரவாளர்கள் இளங்கோவனை நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது இரு தரப்பினரும் தங்களது தவறுகளுக்கு பரஸ்பரம் வருத்தம் தெரிவித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்ற அம்பேத்கர் 125-வது விழாக் குழு கூட்டத்தில் ப.சிதம்பரம், இளங்கோவன், திருநாவுக்கரசர், குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இளங்கோவனை தலைவராகவும், மாநில எஸ்.சி. பிரிவுத் தலைவர் செல்வப்பெருந்தகையை அமைப்பாளராகவும் கொண்ட 31 பேர் கொண்ட இக்குழுவில் ப.சிதம்பரமும் இடம்பெற்றுள்ளார்.

ப.சிதம்பரத்தை அவரது கார் வரை வந்து வரவேற்ற இளங்கோவன், மீண்டும் கார் வரை சென்று வழியனுப்பியும் வைத்தார். இதன் மூலம் சிதம்பரம்-இளங்கோவன் இடையே சமரசம் ஏற்பட்டுள்ள தாக அக்கட்சியினர் தெரிவிக் கின்றனர்.

மே 2 ம் தேதி ஆளுநர் மாளிகையை நோக்கி நடை பெறும் பேரணியில் ப.சிதம்பரம் பங்கேற்க இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து இளங் கோவனிடம் கேட்டபோது, சிதம்பரத்துடன் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அடிக்கடி அவருடன் பேசி வருகிறேன். மே 2 ம் தேதி ஆளுநர் மாளிகையை நோக்கி நடைபெறும் பேரணியில் ப.சிதம்பரம் பங்கேற்பார். நாங்கள் ஒற்றுமையாகவே இருக்கிறோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

9 mins ago

இந்தியா

5 mins ago

இந்தியா

35 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்