ஸ்ரீபெரும்புதூரில் இன்று ஸ்ரீராமானுஜர் அவதார உற்சவம்: சிறப்பு மலர் அலங்காரத்தில் வீதியுலா

By செய்திப்பிரிவு

ஸ்ரீராமானுஜர் அவதரித்த சித்திரை திருவாதிரை நட்சத்திர உற்சவம், பெரும்புதூரில் இன்று வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஆதிகேசவ பெருமாள் மற்றும் ஸ்ரீபாஷ்யகார சுவாமி கோயில்கள் அமைந்துள்ளன. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.

இந்தாண்டுக்கான பிரம் மோற்சவம் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, 10 நாட்களுக்கு ராமானுஜர் (பாஷ்யகார சுவாமி) அவதார உற்சவம் நடைபெற்று வருகிறது.

இதில், ஸ்ரீராமானுஜர் தினந்தோறும் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங் களில் வீதியுலா வந்து பக்தர் களுக்கு அருள்பாலித்து வருகி றார்.

இந்நிலையில், பிரம் மோற்சவத்தின் முக்கிய உற்சவ மான, ராமானுஜர் அவதரித்த சித்திரை திருவாதிரை நட்சத்திர நாளான இன்று, உற்சவர் ஸ்ரீராமானுஜர் சிறப்பு மலர் அலங்காரத்தில் வீதியுலா வர உள்ளார். மேலும், இரவு முழுவதும் கோயிலில் ஸ்ரீராமானுஜரை மக்கள் தரிசிப்பர்.

கந்தபொடி தூவுதல்

நாளை மறுநாள் கந்தபொடி தூவும் உற்சவம் நடைபெற உள்ளது. இதில் உற்சவர் ராமானுஜர் மீது பக்தர்கள் கந்தபொடி தூவி வழிபடுவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

6 mins ago

சுற்றுச்சூழல்

12 mins ago

இந்தியா

43 mins ago

சினிமா

50 mins ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஆன்மிகம்

56 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்