பல்லடம் அருகே கார் - லாரி மோதல்: புதுமண தம்பதி உட்பட 6 பேர் பலி

By செய்திப்பிரிவு

கோவை - பல்லடம் சாலையில் நேற்று ஏற்பட்ட விபத்தில், திருமண விழாவுக்காக தமிழகம் வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த புதுமணத் தம்பதி உட்பட 6 பேர் இறந்தனர்.

சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்தவர் சித்தார்த் மாலு (30). இவருக்கு அண்மையில்தான் திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி சந்தியா மாலு (28)., சந்தியாவின் சகோதரி சாக்‌ஷி (30). அவரது கணவர் விகாஷ் (32), மகள் பவ்யா (4). இவர்கள் 5 பேரும், வரும் 27-ம் தேதி உதகையில் நடைபெறும் உறவினர் இல்லத் திருமணத்துக்காக, ராய்ப்பூரில் இருந்து நேற்று அதிகாலை கோவை ரயில்நிலையம் வந்தடைந்தனர்.

திருமணத்துக்கு 2 நாள் உள்ள நிலையில், கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல அவர்கள் முடிவெடுத்தனராம். அதன்படி, நேற்று அதிகாலை கோவை ரயில் நிலையத்தில் இருந்து கொடைக்கானலுக்கு வாடகைக் காரில் புறப்பட்டுள்ளனர். உதகையைச் சேர்ந்த மோகன் காரை ஓட்டியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கே.என்.புரம் அருகே சென்றபோது, பார்சல் ஏற்றி வந்த லாரி மோதியதில், புதுமணத் தம்பதி, ஓட்டுநர் உட்பட காரில் பயணித்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இவர்களின் சடலங்கள், பல்லடம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக் கப்பட்டன. இறந்தவர்களின் சடலங் களை விமானம் மூலம் அவர்களின் சொந்த ஊரான ராய்ப்பூருக்கு கொண்டு செல்ல உறவினர்கள் திட்டமிட்டுள்ளனர்.

கால் முறிவு ஏற்பட்டுள்ள லாரி ஓட்டுநர் கருப்பையா கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 mins ago

ஜோதிடம்

7 mins ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்