விவசாயிகள் வட்டி மானிய திட்டத்தில் மாற்றம்: மாநில முதல்வர்களுடன் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம்

By செய்திப்பிரிவு

விவசாயிகளுக்கான வட்டி மானி யத் திட்டத்தில் மாற்றம் செய்வது குறித்து மாநில முதல்வர்களுடன் ஆலோசித்த பிறகே மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந் திர மோடிக்கு நேற்று அனுப் பிய கடிதத்தில் அவர் கூறியிருப் பதாவது:

குறுகிய கால பயிர்க் கடன்களுக் கான வட்டி மானியத் திட்டத்தில் மத்திய அரசு மாற்றங்கள் செய்ய இருப்பதாக செய்திகள் வந்துள் ளன.

வேளாண்துறையின் வளர்ச் சிக்கு பயிர்க் கடன்கள் அவசியமான தாகும். இன்றைய சூழலில் விவசாயிகளை ஊக்குவிக்க பயிர்க் கடன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும்.

தமிழகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு அமைப்பு களுக்கு 4 சதவீத மானியமும், வங்கிகள் மூலம் கூடுதலாக 2 சதவீத மானியமும் வழங்கப்படு கிறது. கடனை முறையாக திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீத கூடுதல் மானியமும் வழங்கப்படுகிறது. இந்தச் சலுகை கள் குறித்த நேரத்தில் கடனை திருப்பி கட்ட விவசாயிகளுக்கு உதவுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 16-ம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில், விவசாயிகளுக்கான வட்டி மானியத் திட்டம் வரும் ஜூன் 30-ம் தேதியுடன் முடிவதால், அதில் மத்திய அரசு மாற்றங்களை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான விவசாயிகள் ஜூன் மாதத்துக்குப் பிறகு குறுவை சாகுபடிக்காக பயிர்க் கடன் பெறு வார்கள். எனவே, வரும் ஜூன் 30-ம் தேதிக்குப் பிறகும் மத்திய அரசின் வட்டி மானியம் தொடர்ந்தால்தான் தமிழக விவசாயிகள் பலன் பெறு வார்கள்.

பயிர்க் கடனுக்கான வட்டியை அதிகப்படுத்துவது, வட்டி மானி யத்தை நேரடி மானியத் திட்டத்தில் இணைப்பது என வட்டி மானியத் திட்டத்தில் 2 முக்கிய மாற்றங்களை செய்ய இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

இது விவசாயிகளுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பருவம் தவறி பெய்த மழையால் நாட்டின் பல மாநிலங்களில் பயிர் கள் சேதமடைந்துள்ளன. வரும் ஆண்டுகளில் பருவ மழை குறை வாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில் பயிர்க் கடன் களுக்கான சலுகைகளை குறைப் பது விவசாயிகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்.

வட்டி மானியத்தை நேரடியாக மத்திய அரசே வழங்காமல் வங்கி கள் மூலமே வழங்க வேண்டும். இது குறித்து ஏதாவது முடிவெடுத் திருந்தால் அதனை மறுபரிசீலனை செய்ய தாங்கள் (பிரதமர்) உத்தர விட வேண்டும்.

மாநில முதல்வர் களுடன் ஆலோசித்த பிறகே வட்டி மானியத் திட்டத்தில் மாற்றம் செய்வது குறித்து மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

28 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

உலகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்