இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்: பொதுமக்கள் கண்டு ரசித்தனர்

By செய்திப்பிரிவு

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நேற்று நிகழ்ந்தது. சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கில் நூற்றுக்கணக்கான மக்கள் இதைக் கண்டு ரசித்தனர்.

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால், சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நேற்று நிகழ்ந்தது. இது இந்திய நேரப்படி மாலை 3.45 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணி வரை நீடித்தது. முழுமையான கிரகணம் மாலை 5.31 மணிக்கு தொடங்கி 12 நிமிடங்கள் நீடித்தது.

இந்த முழு சந்திர கிரகணத்தை தென் அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளில் உள்ளவர்களால் மட்டுமே பார்க்க முடிந்தது. இந்தியாவில் பகுதி கிரகணம் மட்டுமே தெரிந்தது. பகுதி சந்திர கிரகணம் மாலை 6.30-க்கு தொடங்கி இரவு 8.30 மணி வரை நீடித்தது. இந்த நிகழ்வின்போது சந்திரன் கருஞ்சிவப்பாக காட்சியளித்தது.

தொலைநோக்கி வழியாக பொதுமக்கள் சந்திர கிரக ணத்தை பார்ப்பதற்காக பிர்லா கோளரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நூற்றுக் கணக்கான மக்கள் இதைக் கண்டு ரசித்தனர். சந்திர கிரகணத்தை முன்னிட்டு பெரும்பாலான கோயில்கள் நேற்று மாலை கிரகணம் முடியும்வரை மூடப் பட்டிருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

50 mins ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்