இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர், 122 உறுப்பினர்களுக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு: நிர்வாகிகள் தேர்வில் விதிமீறியதாக குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் மாநிலக் குழு உறுப்பினர்கள், மாநிலச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டது விதிகளுக்கு புறம்பானது என்பதால் அவர்கள் செயல்பட தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த எம்.சேகர், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ஏ.வேணுகோபால் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்ப தாவது:

கோவையில் கடந்த பிப்ரவரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட் டைக் கூட்டுவதற்கு முன்னாள் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனுக்கு அதிகாரம் இல்லை. மாநாட்டில், மாநிலக் குழு உறுப்பினர்களாக 122 பேரும், மாநிலச் செயலாளராக ஆர்.முத்தர சனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வாக் களிக்க தகுதியில்லாத சிலரும் இதில் வாக்களித்துள்ளனர். கடலூர், திருநெல்வேலி மாவட்டங்கள் சார்பில் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படாதவர்கள்.

கட்சி விதிகளின்படி, புதிய மாநிலக் குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற் கான பட்டியலை குழுவின் முன்னாள் உறுப்பினர்கள்தான் அளிக்க வேண்டும். மாறாக, முன்னாள் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தாமாகவே பட்டியல் தயாரித்து, தேர்தல் நடத்தியுள்ளார். அந்த பட்டியலுக்கு குழு முன்னாள் உறுப்பினர்களிடம் அவர் ஒப்புதல் பெற வும் இல்லை. எனவே, அதன் அடிப்படை யில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தும், அவர்கள் அனைவரும் மாநிலச் செயலாளர் தேர்தலில் வாக்களித்ததும் விதிகளுக்கு புறம்பானது. சட்ட விரோத மாக நடத்தப்பட்ட இத்தேர்தலில், மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முத்தரசன் 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

எனவே, இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு கூட்டப்பட்டதையும், அதில் மாநிலக் குழு உறுப்பினர்கள், மாநிலச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதையும் செல்லாது என அறிவிக்க வேண்டும். மாநிலச் செயலாளர், மாநிலக் குழு உறுப்பினர்கள் செயல்பட நிரந்தர தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரபாபு விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார். வழக்கை விசாரணைக்கு ஏற்பது தொடர்பாக 3 வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர், தமிழ்நாடு மாநில செயலாளர் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்