தலைமைக்கு எதிராக வழக்கு: 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம் - இந்திய கம்யூனிஸ்ட் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர்கள் அக்கட்சி யில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து இந்திய கம் யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு விதிகளின்படி, கிளை கமிட்டி முதல் அனைத்துப் பொறுப்புகளுக்கும் மாவட்ட, மாநில, அகில இந்திய மாநாடுகள் நடந்து முடிந்து ஜனநாயக ரீதியில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கட்சியின் கட்டுப் பாட்டுக்கு மாறாக வழக்கு தொடர் வது, காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது, கட்சித் தலை மைக்கு எதிராக அவதூறு பரப்பு வது போன்ற கட்சி விரோதச் செயல் களில் எம்.சேகர், ஏ.வேணு கோபால் ஆகியோர் ஈடுபட்டுள்ள னர். எனவே, அவர்கள் இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட் டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

பின்னணி என்ன?

கடந்த பிப்ரவரியில் கோவை யில் நடந்த கட்சியின் மாநில மாநாட்டில் 122 மாநிலக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டனர். மாநிலச் செயலாளர் பத விக்கான தேர்தலில் தா.பாண்டி யன் ஆதரவாளரான இரா.முத்தர சன் 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மாநில துணைச் செயலாளராக இருந்த சி.மகேந்தி ரன் தோல்வி அடைந்தார்.

மாநிலச் செயலாளர், 122 மாநிலக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதை செல் லாது என அறிவிக்கக்கோரி கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர்களான சேகர், வேணுகோபால் ஆகியோர் கடந்த 10-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதுகுறித்து கடந்த 11-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் தா.பாண்டியன், ‘‘கூட்டணிக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பிளவுபடுத்தும் சதியில் முக்கிய அரசியல் கட்சி ஈடுபட்டுள்ளது. அதற்கு எங்கள் கட்சியில் சிலர் பலியாகியுள்ளனர்’’ என குற்றம்சாட்டினார். இந்நிலையில், தலைமைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த இருவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

வழக்கு தொடர்வது, புகார் கொடுப்பது, கட்சித் தலைமைக்கு எதிராக அவதூறு பரப்புவது போன்ற கட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டதால் நீக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

46 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஓடிடி களம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்