நக்சல் தாக்குதலில் இறந்த சிஆர்பிஎப் வீரருக்கு வீரப்பதக்கம்

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தைச் சேர்ந்தவர் கிளைமென்ட் ஜோசப். மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 186-வது பட்டாலியனில் தலைமைக் காவலராக இருந்த இவர், மக்களவைத் தேர்தல் நேரத்தில் 2013, நவ. 11-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம், தண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்களுடன் நேரிட்ட சண்டையில் உயிரிழந் தார்.

கிளைமென்ட் ஜோசப்பின் உயிர்த் தியாகத்தை பாராட்டி, கடந்த குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவரால் வீரப்பதக்கம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று ஆவடி மத்திய ரிசர்வ் போலீஸ் படை குரூப் சென்டரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், படையின் தென் பிராந்திய தலைவர் விஷ்ணுவர்தன ராவிடமிருந்து வீரப்பதக்கத்தை கிளைமென்ட் ஜோசப்பின் மனைவி மேரி ஜோஸ்பின் பெற்றுக் கொண்டார்.

ஏற்கெனவே, ஆவடி மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் குரூப் சென்டரில் உள்ள தெருக்களில் ஒன்றுக்கு கிளைமென்ட் ஜோசப் பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

மேலும்