காஞ்சிபுரம், திருவள்ளூரில் குடிநீர் பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி

By செய்திப்பிரிவு

குடிநீர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு காஞ்சிபுரம், திரு வள்ளூர் மாவட்டங்களில் விழிப்பு ணர்வு பேரணி நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 633 ஊராட்சிகளிலும் குடிநீர் மாதிரிகளை பரிசோதனை செய்ய நீர் பரிசோதனை பெட்டி கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை பெட்டிகளை கையாளும் முறை குறித்து, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த 9-ம் முதல் 13-ம் தேதி வரை ஒன்றிய அலுவலகங்களில் பயிற்சி யளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் நகரப் பகுதியில் பள்ளி மாணவர்கள் மூலம் விழிப் புணர்வு பேரணி நேற்று நடத்தப் பட்டது. இதை கால்நடை பரா மரிப்பு துறை அமைச்சர் சின்னையா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட ஆட்சியர் சண்முகம், காஞ்சிபுரம் வட்டாட்சியர் சந்திரசேகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர்

இதேபோன்று, திருவள்ளூர் மாவட்டத்திலும் தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப் புணர்வு வாரம் கடைபிடிக்கப் படுகிறது. இதையொட்டி, திருவள்ளூர் பஸ் நிலையம் அருகில் உள்ள கலைச்சங்கம் மைதானத்தில் தொடங்கி, தேரடி, ஜெ.என். சாலை உள்ளிட்ட பகுதிகள் வழியாக மீண்டும் கலைச்சங்க மைதானம் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) லட்சுமணன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்லூரி மாணவர்கள் என 450-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

9 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்