அரசு சட்டக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு பட்டியல் வெளியீடு

By செய்திப்பிரிவு

அரசு சட்டக் கல்லூரி முதுநிலை விரிவுரையாளர் இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரி யம் வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப் பட்டவர்களுக்கு விரைவில் பணிநிய மன ஆணை வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் சட்டம் மற்றும் சட்டம் அல்லாத பாடங்களில் (சமூகவியல், வரலாறு, பொருளாதாரம், அரசியல் அறிவியல்) 50 முதுநிலை விரிவுரை யாளர் பணியிடங்களை நிரப்புவதற் காக கடந்த 21.9.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித்தேர்வை நடத்தியது.

இத்தேர்வில் வெற்றி பெற்றவர் களுக்கு கடந்த ஜனவரி மாதம் 2-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பும், அதைத்தொடர்ந்து நேர்முகத்தேர்வும் நடத்தப்பட்டது. இந்நிலையில், இறுதியாக பணிக்கு தேர்வு செய்யப் பட்டவர்களின் தேர்வுப்பட்டியலை (அரசியலமைப்புச் சட்டம், சர்வதேச சட்டம் பாடங்கள் நீங்கலாக) ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வுப்பட்டியலை பாடப்பிரிவுகள் வாரியாக ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) தெரிந்துகொள்ளலாம்.

தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை சட்டக் கல்வி இயக்குநர் மூலம் விரைவில் வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

34 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

37 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்