கடலோர பாதுகாப்புப் படை காவல் நிலையங்கள் 2 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும்: கடலோர பாதுகாப்புப் படை குழும எஸ்.பி. தகவல்

By செய்திப்பிரிவு

கடலோர பாதுகாப்புப் படை போலீஸாருக்காக புதிதாக கட்டப்பட்டு வரும் 2 காவல் நிலை யங்கள் 2 மாதங்களில் பயன் பாட்டுக்கு வர உள்ளதாக கடலோர பாதுகாப்புப் படை குழுமத்தின் கண் காணிப்பாளர் மனோகரன் தெரி வித்துள்ளார்.

கடல்வழியே நடக்கும் சட்டவிரோத செயல்கள் மற்றும் ஊடுருவல் முயற்சிகளை தடுக்க கடலோர பாதுகாப்புப் படை போலீஸார் கண்காணிப்பில் ஈடு பட்டு வருகின்றனர். அவர்களுக்கு என தனியான காவல் நிலை யங்கள், படகு நிறுத்தம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால், கண்காணிப்புப் பணியில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோவளம், முதலியார் குப்பம், சதுரங்கப் பட்டினம் ஆகிய பகுதிகளில் கடலோர பாதுகாப்புப் படை காவல் நிலையங்கள் அமைக்கப் படும் என கடந்த 2013-ம் ஆண்டு அரசு அறிவித்தது.

இதற்காக தலா ரூ.48 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. மேற்கூறிய பகுதிகளில் தலா 50 சென்ட் அளவில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் காவல் நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்தது.

இதில், சதுரங்கப்பட்டினம் பகுதியில் காவல்நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட நிலப்பகுதி, தொல்லியல்துறை கட்டுப்பாட்டின் கீழ் வருவதால் அத்துறையின் ஒப்புதலுக்கு விண் ணப்பிக்கப்பட்டுள்ளது. மற்ற 2 இடங்களில் நடைபெற்று வரும் காவல் நிலைய கட்டுமானப் பணி முடியும் நிலையில் உள்ளதால் அவை விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.

இதுகுறித்து, கடலோர பாது காப்பு படை குழும எஸ்.பி. மனோகரன் கூறியதாவது: முத லியார் குப்பம், கோவளம் ஆகிய பகுதிகளில் காவல்நிலையங்கள் அடுத்த 2 மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும். இதன்மூலம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகள் மற்றும் கடல் வழி போக்கு வரத்துகளை தீவிரமாக கண் காணிக்க முடியும் என்றார்.

இதுகுறித்து, கடலோர பாது காப்புப் படை போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: கல்பாக்கம் பகுதியில் நாட்டின் மிக முக்கிய அணுமின் நிலையம் அமைந் துள்ளது. இதனால், இங்குள்ள கடலோரங்களையும் படகுகள் மற்றும் கப்பல்களையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டியது அவசியம்.

புதிய காவல் நிலையங்கள் பயன்பாட்டுக்கு வந்தால் கடல் வழி கண்காணிப்பு மற்றும் கடல் ரோந்து பணி தீவிரப்படுத்தப்படும். காவல் நிலையங்களுக்கு தலா 20 போலீஸார் நியமிக்கப்படுவார்கள் என்பதால் சுழற்சி முறையில் போலீஸார் கண்காணிப்புப் பணி யில் ஈடுபடுவர். ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் இடையே 20 கி.மீ. தொலைவு மட்டுமே இடைவெளி உள்ளதால், கடலோர பகுதிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

தமிழகம்

52 mins ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்